இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

காத்திருக்கும் சவால்கள் திருமணத்திற்கு பின்பும் அசத்துவாரா கோஹ்லி?

12/13/2017 3:55:21 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

திருமணம் ஆன இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. இந்த டெல்லி வீரரின் வாழ்க்கையில், அனுஷ்கா சர்மா அதிக செல்வாக்கு கொண்டவர். தனது 52 சர்வதேச சதங்களில் 36 சதங்களை 2013ம் ஆண்டில் இருந்து விராட் கோஹ்லி விளாசியுள்ளார். அதாவது அனுஷ்கா சர்மாவை முதல் முறையாக சந்தித்த பிறகு. தற்போது அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து விட்டதால், விராட் கோஹ்லி இன்னும் உச்சபட்ச பார்முக்கு செல்வாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த நேரத்தில், திருமணம் முடிந்த பிறகு மற்ற கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது? என்பதை பார்ப்பது சுவாரசியமானதாக இருக்கும்.

 சீனியர் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனான டோனி, கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் சாக்‌ஷியை திருமணம் செய்து கொண்டார். டோனி தனது 9,891 ஒரு நாள் போட்டி ரன்களில், 4,158 ரன்களை திருமணத்திற்கு பிந்தைய 7 ஆண்டுகளில் ஸ்கோர் செய்துள்ளார். அதுதவிர 2011ம் ஆண்டு உலக கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றவும் உதவினார். 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடர் தொடங்க சில நாட்களே இருந்த நிலையில், டோனி-சாக்‌ஷி தம்பதியருக்கு ஜிவா பிறந்தார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியா, அந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. ரஹானே-ராதிகா திருமணம் 2014ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்றது. அதன்பின் ரஹானே தனது கேமை முற்றிலும் வேறுபட்ட லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார். ரஹானேவின் 2,826 டெஸ்ட் ரன்களில், 2,609 ரன்கள் அவரின் திருமணத்திற்கு பிறகுதான் வந்துள்ளன. 2015ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ரித்திகாவுடன் திருமணம் முடிந்த பிறகு ரோகித் சர்மா அன் ஸ்டாப்பபிள். கடந்த 2 ஆண்டுகளில், 1,642 ஒரு நாள் ரன்களை ரோகித் சர்மா விளாசியுள்ளார். அத்துடன் தனது 15 ஒரு நாள் சதங்களில் 7 சதங்களையும் இந்த கால கட்டத்தில்தான் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

 இந்த வரிசையில் விராட் கோஹ்லி முன் பெரிய சவால் காத்திருக்கிறது. திருமணத்திற்கு பின் அவர் பங்கேற்க உள்ள முதல் தொடரே, சவால் நிறைந்தது. இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம்தான், திருமணத்திற்கு பின் விராட் கோஹ்லி எதிர்கொள்ளும் முதல் தொடர். இதுதவிர இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள், 2019ம் ஆண்டு உலக கோப்பை என இனி இந்திய அணி விளையாட இருக்கும் பெரும்பாலான தொடர்கள் மிகவும் கடினமானவைதான். இவை எல்லாவற்றிலும் ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் விராட் கோஹ்லி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மேலும் சில
  • இந்திய அணிக்கு கேப்டன் ஆன நாளை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்: ரோகித் சர்மா உருக்கம்



  • பாரம்பரிய ஆஷஸ் தொடரை பறிகொடுத்தது இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் சவால் அளிக்க வேண்டும்



  • தென் ஆப்ரிக்காவில் இந்தியா வெல்லும்: சாஹா நம்பிக்கை



  • ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தியதே உத்வேகம் அளித்தது: குல்தீப் யாதவ் உற்சாகம்



  • என்னையும், குல்தீப் யாதவையும் அஸ்வின், ஜடேஜாவுடன் ஒப்பிடுவது நியாயமற்றது: சஹால் கருத்து



  • ஒருநாள் தொடரையும் வென்றது இந்தியா இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்பதில்லை: பயிற்சியாளர் நிக் போத்தாஸ் வேதனை



  • கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்ட புயல்: எனது மகன் தவறு செய்திருந்தால் கடுமையான தண்டனை கொடுங்கள்



  • பகல்/இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி கருத்து



  • இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டி டெஸ்ட் அணிகளுக்கு கடும் சவால் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சபதம்



  • சூர்யாவை வீழ்த்திய விராட் கோஹ்லி!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]