இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பிரதமர் மோடியை சந்திக்காததற்கு வருத்தம் தெரிவித்தார் பிபா தலைவர்

11/7/2025 4:14:10 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

ஜுரிச்: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடர், கடந்த அக்டோபர் 6-28ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 6ம் தேதி புது டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை சந்திக்க முடியாததற்கு ஜியானி இன்பான்டினோ வருத்தமும் தெரிவித்துள்ளார். கடிதத்தில், ‘’பல மறக்க முடியாத நினைவுகளுடன் பிபா பிரதிநிதிகள் குழு ஜுரிச் திரும்பி விட்டது (பிபா அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உள்ளது). பிபா கவுன்சில் மீட்டிங் மற்றும் இறுதி கட்ட போட்டிகளுக்காக கொல்கத்தாவில் தங்கியிருந்தபோது எங்களுக்கு பல புதிய நட்புகள் கிடைத்தது. உங்கள் நாடு பிபா யு-17 உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதற்கு, ஆற்றிய பணிகளுக்காக உங்கள் அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புது டெல்லி, நவி மும்பை, கோவா, கொச்சி, கவுஹாத்தி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த உதவிய உங்கள் அரசு, உள்ளூர் போட்டி ஏற்பாட்டு குழு மற்றும் கடினமாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். அற்புதமான மற்றும் மறக்க முடியாத தொடருக்கு, அவர்கள் அளித்த பங்களிப்பு மகத்தானது. ஏஐஎப்எப்-ன் (அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு) பணியும் பாராட்டுக்குரியது.இதர முக்கியமான பணிகள் காரணமாக, துரதிருஷ்டவசமாக புது டெல்லி தொடக்க விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை மற்றும் உங்களை சந்திக்க முடியவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனினும் உங்கள் நாட்டில் கால்பந்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை பரிமாறிக்கொள்ள எதிர்காலத்தில் நாம் சந்திப்போம் என நம்புகிறேன்’’ என கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • இந்தியாவை வீழ்த்துவது கடினமானது: நியூசிலாந்து வீரர் சாண்ட்னர் கருத்து



  • ‘இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்’: சரியான நேரத்தில் டோனி விலகுவார்



  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]