இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: 85 பதவிக்கு 4199 பேர் போட்டி

10/13/2017 3:34:23 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் பதவியில் உள்ள 85 பணியிடங்களுக்கான மெயின் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வு கூடத்துக்கு செல்போன், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பணியில் அடங்கிய துணை கலெக்டர் -29 காலிப்பணியிடம், போலீஸ் டிஎஸ்பி- 34, வணிகவரித்துறை உதவி ஆணையர் -8, மாவட்ட பதிவாளர்-1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 5, தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகளில் அடங்கிய மாவட்ட அலுவலர்-8 உள்ளிட்ட 85 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 1,37,855 பேர் கலந்து கொண்டனர். இதில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு(மெயின் தேர்வு) 4199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த  தேர்வு நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த தேர்வு நடந்தது. சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தான் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு எழுதுபவர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். மேலும் தேர்வு மையங்களுக்கு கைபேசி, மின்னணுச் சாதனங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் சோதனையும் நடத்தினர்.

மேலும் சில
  • இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை



  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு



  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்



  • புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்



  • கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் கருகி பலி



  • வரும் நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: செங்கோட்டையன் தகவல்



  • தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?: ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு



  • டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி



  • சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது குறைந்த விலையில் தின்பண்டம்: அரசிடம் வலியுறுத்த விஷால் முடிவு



  • ஊதிய உயர்வு கோரி காட்டாங்கொளத்தூரில் 3வது நாள் போராட்டம் தனியார் மருத்துவமனை நர்ஸ்கள் கைகளை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரி தாக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]