இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : ம.பி. முதல்வர் சவுகான் அதிரடி

10/7/2025 2:45:26 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

போபால்: சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போடும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அண்மைக்காலங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8 வயது சிறுவன் ஒருவர் அந்த பள்ளியில் வேலைபார்த்து வந்த பஸ் கண்டக்டரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டான். கடந்த வாரம் டெல்லி பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பலாத்கார குற்றத்துக்கான தண்டனை ஆயுளாக அதிகரிக்கப்பட்டது. தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி தலைமையில் நடைபெற்ற பாரத் யாத்ரா பிரசாரத்தில் மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சிறுவர்களும், சிறுமிகளும் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், வீடுகளிலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடான செயல். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நாடு முழுவதும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. சிறுவர், சிறுமிகளை பலாத்காரம் செய்யும் கொடியவர்களை தூக்கில் போட வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் உரிய சட்டதிருத்தம் கொண்டுவரப்படும். இந்த சட்டதிருத்தம் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். அரசுடன் சமூகமும் சேர்ந்த இந்த கொடும் செயலுக்கு எதிராக போராட வேண்டும். குழந்தை தொழிலாளர் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு சவுகான் கூறினார்.

மேலும் சில
  • ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலங்கானா முதல்வர் பேச்சு



  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை சிறையில் தள்ளுவோம்: உ.பி. பாஜ அமைச்சர் பேச்சால் சர்ச்சை



  • ‘சிபிஐ பெயரைக் கூறி தொடர்ந்து மிரட்டுகிறார்’ கவர்னர் கிரண்பேடி மீது புதுவை அமைச்சர் குற்றச்சாட்டு: ஜனாதிபதிக்கு கடிதம்



  • டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்



  • பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன் பெற்றார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • அரசுக்கு கட்டணம் பாக்கி வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை நிராகரிப்பு



  • அரசியல் கொலைகளை கண்டித்து டெல்லியில் பேரணி கேரளாவில் பாஜ செல்வாக்கை தடுக்க ஆளும் சிபிஎம் நினைக்கிறது: அமித்ஷா குற்றச்சாட்டு



  • கீழ் நீதிமன்றங்களில் பெண்கள் வழக்கு தொடர்வது மிகவும் குறைவு: ஆந்திரா முதலிடம்; குஜராத் கடைசி



  • திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]