இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பிபா யு-17 உலக கோப்பை இன்று தொடக்கம் ரசித்து விளையாடுங்கள் கனவுகளை துரத்துங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து

10/6/2025 3:00:29 PM
திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம் ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்

புது டெல்லி: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்கி, 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவதாலும், பிபா நடத்தும் எந்த ஒரு வயது பிரிவினருக்குமான உலக கோப்பை தொடரிலும் இந்தியா முதல் முறையாக பங்கேற்பதாலும், ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் நாளான இன்று 4 போட்டிகள் நடைபெறுகின்றன. புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், மாலை 5 மணிக்கு நடைபெறும் போட்டியில், கொலம்பியா-கானா அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், இந்தியா-அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.  முன்னதாக நவி மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில், மாலை 5 மணிக்கு நடைபெறும் போட்டியில், நியூசிலாந்து-துருக்கி அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், பராகுவே-மாலி அணிகளும் மோதுகின்றன. யு-17 உலக கோப்பை தொடர்களில் பொதுவாக தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. தொடக்க விழாவுக்கான பணத்தை, விளையாட்டின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும்படி பிபா கூறியுள்ளது. எனினும் புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், சிறிய அளவிலான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். முதல் போட்டியை காண வேண்டும் என பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டியதால்தான், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் நவி மும்பையில் இருந்து புது டெல்லிக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் 12 பேரை பிரதமர் மோடி கவுரவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்திய யு-17 அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவிக்கவுள்ளார். புது ெடல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், சுமார் 60 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை கண்டு களிக்க முடியும். பிரதமர் மோடி வருவதால், மைதானம் காலியாக இருப்பதை விளையாட்டு அமைச்சகம் விரும்பவில்லை. எனவே உள்ளூர் போட்டி ஏற்பாட்டு குழு 26,750 டிக்கெட்களை, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட பள்ளிகள், என்ஜிஓக்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அவற்றை மத்திய விளையாட்டு அமைச்சகமும் இலவசமாக வினியோகம் செய்துள்ளது. இந்திய யு-17 அணிக்கு, நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், ‘’உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய யு-17 அணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் (இந்திய வீரர்கள்) போட்டிகளை ரசித்து விளையாடுங்கள். கனவுகளை துரத்துங்கள். ஏனெனில் கனவுகள் உண்மையாக மாறும்’’ என கூறியுள்ளார். அமெரிக்கா வலுவான அணி என்றாலும், சொந்த மண் என்பதால், இந்தியா கடுமையான சவாலை அளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

மேலும் சில
  • இந்திய அணியின் கேப்டன் யார் இந்த அமர்ஜித் சிங்?



  • பிபா யு-17 உலக கோப்பை நாளை தொடக்கம் : இந்திய அணி சிறப்பாக செயல்படும்



  • ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு டி20 போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவோம் : ஆஸ்திரேலிய வீரர் ஹென்ரிக்ஸ் உற்சாகம்



  • பேரழிவை ஏற்படுத்திய இர்மா, மரியா புயல்கள் : நிதி திரட்ட காட்சி கிரிக்கெட் ; பொல்லார்டு, சம்மி விளையாடுகின்றனர்



  • 5வது புரோ கபடி லீக் : தமிழ்தலைவாஸ் தொடர்ந்து 4வது தோல்வி



  • இந்தியாவுக்கு எதிராக ஆட ஆஸி. வீரர்களுக்கு பயம் : பயிற்சியாளர் புலம்பல்



  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றும் : கவாஸ்கர் கணிப்பு



  • ஆஸி. தோல்வி ஏன்? சேவாக் விளக்கம்



  • சிறந்த கேப்டனாக இருப்பதற்கான திறன்களை பெற்று விட்டார்’: விராட் கோஹ்லிக்கு கங்குலி பாராட்டு



  • முதல் டெஸ்ட்டில் இலங்கை வெற்றி : நல்ல பார்ட்னர்ஷிப் அமையாதது அழுத்தத்தை ஏற்படுத்தி விட்டது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]