இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் மோதல் சயனைடு விஷம் கொடுத்து தர் கொலையா?

10/6/2025 2:55:29 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரவுடி கம்போடியாவில் சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் போதை கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி தர் (46). இவர் மீது நில அபகரிப்பு, 5 கொலை, 8 கொலை முயற்சி, 4 ஆள் கடத்தல், கட்டபஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடிதடி செம்மரம் கடத்துதல், ஆளில்லா சொத்துக்களை மிரட்டி வாங்குதல் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியில் வந்துள்ளார். காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த விஜயகுமார், தரை பிடிப்பதில் தீவிரம் காட்டினார். தர் வெளிநாட்டுக்கு தப்பியதால், இன்டர்போல் போலீஸ் உதவியுடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் வந்த ஏடிஎஸ்பி நாத் இந்த வழக்கில் தீவிரம் காட்டினார். தரின் கூட்டாளிகளை கைது செய்வது, அவரின் தொடர்புகளை கண்டறிந்து தீவிர விசாரணை நடத்தியது, அமலாக்கத்துறை மூலம் அவரின் ₹150 கோடி சொத்துக்களை முடக்க தீவிரம் காட்டியது என அவரின் அதிரடி நடவடிக்கைகளால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். தற்போது எஸ்பியாக உள்ள சந்தோஷ் ஹதிமனி இந்த வழக்கில் தீவிரம் காட்டி, இண்டர்போல் போலீஸ் உதவியுடன் தரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தர் சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்று அங்கிருந்து துபாய் சென்றார். பின்னர் கம்போடியா சென்றார். அங்கு மர்மமான முறையில் இறந்துள்ளார். புதன்கிழமை இரவே காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே எல்லப்பா நகரில் உள்ள ஸ்ரீதரின் வீட்டுக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை கண்காணிக்க உளவுத்துறை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதால் காலையில் அவரின் வீட்டுக்கு யாரும் வரவில்லை. மேலும், திருப்பருத்திக்குன்றத்திலும் போலீசார் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், தர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை கொலை செய்யப்பட்டார் என்றும் அவர், தற்கொலைதான் செய்தார் என்றும் இருவேறு கருத்து நிலவுவதால் உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை. தர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட இடத்தில் இலங்கை போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளின் போலி பாஸ்போர்டுகளை தர் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் தெரிகிறது. அவருடன் சமையல்காரர் தேவேந்திரன் உடனிருந்துள்ளார். ‘’பணம், பொருள், சொத்துக்கள் இருந்தும் நிம்மதியாக இருக்க முடியவில்லை, சொந்த ஊருக்கும் வரமுடியவில்லை, பணம், பொருள், சொத்துக்கள், அடியாட்கள் என வாழ்ந்தும் என்ன பிரயோஜனம், தன் மகன், மகளுக்கு எந்த போலீஸ் தொந்தரவும் இருக்க கூடாது என நினைத்த தருக்கு மகனிடம் விசாரணை என்ற செய்தியால் நிலைகுலைந்ததாகவும் இதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது உடலை மீட்க வக்கீல் புருஷோத்தமன், மகள் தனலட்சுமி ஆகியோர் கம்போடியாவுக்கு விரைந்துள்ளனர். தர் மனைவி குமாரி மற்றும் மகன் சந்தோஷ்குமார் ஆகியோர் காஞ்சிபுரத்தில் வீட்டில் உள்ளனர்.
தர், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

அவர்கள் மூலம் தமிழக போலீசார் மற்றும் சில பத்திரிகையாளர்கள் துணையுடன் வழக்கில் இருந்து தப்பிக்க முயன்றார். இதற்காக போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் மோதல் எழுந்துள்ளது. இதனால் கடத்தல் கும்பல் தரை மிரட்டியதாகவும், குடும்பத்துக்கே கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் தர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் புருஷோத்தமனுடன் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்து கொண்டால், உடலை எப்படி சென்னைக்கு எடுத்துச் செல்வீர்கள் என்று கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாயில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது. அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தர்கொலை செய்யப்பட்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவரது உடலை டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் அவரது உடல் சென்னைக்கு வருவதல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தரின் ஆதரவாளர்கள், காஞ்சிபுரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால்தான் தரின் உடல் சென்னைக்கு கொண்டு வர முடியும். இதனால் தரின் மகள் கம்போடியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில், தரின் கூட்டாளிகள் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 43 வழக்குகளில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • வாக்கி டாக்கி ஊழலில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரன் பதவியில் நீடிக்க கூடாது: தலைமை செயலாளரிடம் திமுக நேரில் வலியுறுத்தல்



  • தமிழகம் முழுவதும் போலீசாருக்கு ரேஷன் பொருட்கள் ‘கட்’



  • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு தடாலடி



  • குஜராத்தைப் போல தமிழகத்திலும் பா.ஜ. ஆட்சி அமைந்தால் சிறப்பாக இருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • ஹஜ் மானியத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்



  • பாஜ அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் இணைய வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல்



  • தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்



  • ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்



  • நடிகை ஸ்ருதி ஹாசன் மீது கன்னட நடிகர் கடும் தாக்கு



  • நான் ஸ்லீப்பர் செல்லா?: அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]