இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பெரம்பூரில் பரபரப்பு : பெண் டாக்டருக்கு அரிவாள் வெட்டு

10/5/2025 3:51:35 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

தண்டையார்பேட்டை: பெரம்பூரில் பெண் டாக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர் பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (39). இவர் போரூரில் உள்ள தனியார்  மருத்துவமனையில் டாக்டராக  பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). டாக்டரான இவர், கோயம்பேட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். தம்பதிக்கு மூன்றரை வயதில் மகள் உள்ளார். நேற்று இரவு வேலை  முடிந்ததும் ரம்யா, காரில் வீட்டுக்கு வந்தார். பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு 2வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, பர்தா அணிந்துவந்த ஒருவர், ரம்யாவை வழிமறித்து தகராறு  செய்ததுடன் சரமாரி அரிவாளால் வெட்டினார். இதில் ரம்யா தலை, கழுத்து, முதுகு மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் விழுந்து துடித்தார். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அந்த நபர்  பைக்குடன் தயாராக நின்றுகொண்டிருந்த ஒருவருடன் தப்பிவிட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ரம்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பக்கத்து வீடு மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் மர்ம  ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில், ‘’ ரம்யா கிளினிக்கில் வேலை செய்துவந்த தாமஸ் என்பவருக்கும் ரம்யாவுக்கு தகராறு  இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த பிரச்னையில் ரம்யா வெட்டப்பட்டாரா, வேறு காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • மயிலாப்பூரில் நள்ளிரவு பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: போதையில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தப்பினர்



  • ₹20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் காரில் கடத்தல்: விபத்தில் சிக்கியதால் அம்பலம்



  • முதியவர் கொலை:3 கொள்ளையர்கள் கைது



  • சாராய வியாபாரியாக இருந்து ரவுடியான பிரபல தாதா ஸ்ரீதர் தற்கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்



  • திருத்தணியில் இளம்பெண் கடத்தல்?



  • வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது : நகை, செல்போன் பறிமுதல்



  • பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் : பண்ணை வீட்டில் திருட வந்த கொள்ளையன் அடித்து கொலை



  • வீடு புகுந்து இளம்பெண் படுகொலையில் கணவர் உட்பட 10 பேரிடம் விசாரணை



  • கள்ளக்காதலை விட மறுத்த தந்தை அடித்து கொலை மகன்களுக்கு வலைவீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]