இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பிபா யு-17 உலக கோப்பை நாளை தொடக்கம் : இந்திய அணி சிறப்பாக செயல்படும்

10/5/2025 3:49:09 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

நவி மும்பை: கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, பிபா யு-17 உலக கோப்பை தொடர், இந்தியாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த  கால்பந்து திருவிழா வரும் 28ம் தேதி நிறைவடைகிறது. பிபா நடத்தும் எந்த ஒரு வயது பிரிவினருக்குமான உலக கோப்பையிலும் இந்தியா களமிறங்குவது இதுவே முதல் முறை என்பதால், எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி  கிடக்கிறது. கொல்கத்தா, கொச்சி, புது டெல்லி, நவி மும்பை, கவுகாத்தி, மார்கோ உள்ளிட்ட 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை தலா 4 அணிகள் வீதம் 6 பிரிவுகளாக  பிரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, கொலம்பியா, கானா உள்ளிட்ட அணிகள் அடங்கிய ‘ஏ’ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

முதல் நாளான நாளை 4 போட்டிகள் நடைபெறுகின்றன. நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீஸ் ஸ்டேடியத்தில், நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், நியூசிலாந்து-துருக்கி அணிகள் (பி  பிரிவு)பலப்பரீட்சை நடத்துகின்றன. அதே 5 மணிக்கு, புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், கொலம்பியா-கானா அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன. புது டெல்லி ஜவகர்லால் நேரு  ஸ்டேடியத்தில், நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், இந்தியா-அமெரிக்கா அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதே 8 மணிக்கு, நவி மும்பை டாக்டர் டிஒய் பாட்டீஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், பராகுவே-மாலி அணிகள் மோதுகின்றன. இது குறித்து இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் விஜயன் கூறுகையில்,  ‘’இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்திய அணியின் வீரர்கள் என்னை அதிகம் ஈர்த்துள்ளனர். உலக கோப்பையில் ஒரு நம்பகமான செயல்பாட்டை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று  என்னால் கூற முடியும். இந்திய அணியிடம் தரமும், சாதிக்க வேண்டும் என்ற உறுதியும் காணப்படுகிறது’’ என்றார். 1989-2003க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவுக்காக 79 போட்டிகளில் விஜயன் விளையாடியுள்ளார்.

மேலும் சில
  • சொந்த மண்ணில் விளையாட வேண்டிய போட்டிகளை பொதுவான இடங்களில் விளையாடுவது வேதனை அளிக்கிறது: பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் வருத்தம்



  • தோள்பட்டையில் காயம் ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பினார்



  • சவுரவ் கங்குலி செய்த தியாகத்தால் டோனி மிக சிறந்த வீரராக உருவெடுத்தார்: சேவாக் நெகிழ்ச்சி



  • கொலம்பியாவுடன் இன்று மோதல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்: இந்திய யு-17 அணி வீரர்களுக்கு பூட்டியா ‘அட்வைஸ்’



  • இந்திய அணியின் கேப்டன் யார் இந்த அமர்ஜித் சிங்?



  • பிபா யு-17 உலக கோப்பை இன்று தொடக்கம் ரசித்து விளையாடுங்கள் கனவுகளை துரத்துங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து



  • ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு டி20 போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவோம் : ஆஸ்திரேலிய வீரர் ஹென்ரிக்ஸ் உற்சாகம்



  • பேரழிவை ஏற்படுத்திய இர்மா, மரியா புயல்கள் : நிதி திரட்ட காட்சி கிரிக்கெட் ; பொல்லார்டு, சம்மி விளையாடுகின்றனர்



  • 5வது புரோ கபடி லீக் : தமிழ்தலைவாஸ் தொடர்ந்து 4வது தோல்வி



  • இந்தியாவுக்கு எதிராக ஆட ஆஸி. வீரர்களுக்கு பயம் : பயிற்சியாளர் புலம்பல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]