திருத்தணியில் இளம்பெண் கடத்தல்?
10/5/2025 3:30:49 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த இஸ்லாம் நகரை சேர்ந்தவர் ரஷீத் (45). இவர் கூலி தொழிலாளி. இவரது மகள் ஜமீலா (18). நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். நேற்று அதிகாலை ரஷீத் எழுந்தபோது மகள் ஜமீலாவை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் அவரை தேடியபோது அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருத்தணி காவல்நிலையத்தில் ரஷீத் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜமீலாவை தேடி வருகின்றனர். அவரை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.