இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

5வது புரோ கபடி லீக் : தமிழ்தலைவாஸ் தொடர்ந்து 4வது தோல்வி

10/4/2025 4:09:51 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: 5வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 22 லீக் போட்டியில் விளையாடும். லீக் சுற்று முடிவில் 2 பிரிவிலும் முதல் 3 இடம் பிடிக்கும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு நுழையும். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்த 107வது லீக் ஆட்டத்தில்  தமிழ் தலைவாஸ் -தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் தடுமாறியது. முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் 30 -15 என வலுவான முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் தமிழ்தலைவாஸ் வீரர்களை திணறடித்த தெலுங்கு டை்டன்ஸ் 58-37 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.

தமிழ்தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் படுமோசமாக இருந்தது. முதல் பாதியில் எதிரணி வீரர் ஒருவரை கூட பிடிக்க முடியவில்லை. கேப்டன் அஜய்தாகூர் ரெய்டு மூலம் மட்டும் 20  புள்ளிகளை சேர்த்தார். சென்னையில் தொடர்ந்து 4வது போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்துள்ளது. தனது 17வது லீக்கில் விளையாடிய தமிழ் தலைவாசுக்கு இது 11வது தோல்வி. பி பிரிவில் 34 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் 42-22 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் , 9 மணிக்கு தமிழ் தலைவாஸ்-உத்தரபிரதேச யோத்தா அணிகள் மோதுகின்றன.

மேலும் சில
  • சொந்த மண்ணில் விளையாட வேண்டிய போட்டிகளை பொதுவான இடங்களில் விளையாடுவது வேதனை அளிக்கிறது: பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் வருத்தம்



  • தோள்பட்டையில் காயம் ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பினார்



  • சவுரவ் கங்குலி செய்த தியாகத்தால் டோனி மிக சிறந்த வீரராக உருவெடுத்தார்: சேவாக் நெகிழ்ச்சி



  • கொலம்பியாவுடன் இன்று மோதல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்: இந்திய யு-17 அணி வீரர்களுக்கு பூட்டியா ‘அட்வைஸ்’



  • இந்திய அணியின் கேப்டன் யார் இந்த அமர்ஜித் சிங்?



  • பிபா யு-17 உலக கோப்பை இன்று தொடக்கம் ரசித்து விளையாடுங்கள் கனவுகளை துரத்துங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து



  • பிபா யு-17 உலக கோப்பை நாளை தொடக்கம் : இந்திய அணி சிறப்பாக செயல்படும்



  • ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு டி20 போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவோம் : ஆஸ்திரேலிய வீரர் ஹென்ரிக்ஸ் உற்சாகம்



  • பேரழிவை ஏற்படுத்திய இர்மா, மரியா புயல்கள் : நிதி திரட்ட காட்சி கிரிக்கெட் ; பொல்லார்டு, சம்மி விளையாடுகின்றனர்



  • இந்தியாவுக்கு எதிராக ஆட ஆஸி. வீரர்களுக்கு பயம் : பயிற்சியாளர் புலம்பல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]