இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்

9/18/2017 3:44:34 PM
பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: வங்கி மீது குண்டுவீச்சு: 4 பேர் படுகாயம்

சென்னை : உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் இன்று மனு தாக்கல் செய்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, அக்டோபர் மாதம் 17, 19 தேதிகளில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன், வக்கீல்கள் கிரிராஜன், நீலகண்டன் ஆகியோர் ஆஜராகினர். மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, இடை மனுதாரர் பழனிமுத்து, அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் கடந்த 4ம் தேதி தீர்ப்பளித்தது.தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தேர்தலை நடத்துவதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த கால தாமதம் ஏற்படுவதற்காக தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 9 கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அவர்கள் தொடர்பான அனைத்து தவறுகளையும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். எனவே குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அவர்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை. அதன் நகல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டணம் செலுத்தி பெறும் வகையில் வைக்கப்பட வேண்டும்.

வறட்சியைக் காட்டி தேர்தலை தள்ளிவைக்கும் அதே நேரத்தில் அரசு விழாக்களும், அரசு நிகழ்ச்சிகளும் நிர்ணயிக்கப்பட்ட நாளில் எப்படி நடத்த முடிகிறது? உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்த போதிலும் இந்த நீதிமன்றத்துக்குள்ள அதிகாரத்தையும், அரசியலமைப்பு சட்ட பிரிவு 226ல் தரப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று வெளியிட வேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில்,‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு முன்பு வார்டு வரையறை(எல்லை தொடர்பான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தேர்தல் அறிவிப்பை வெளியிடுவது சட்டச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, உச்சநீதிமன்றத்தில் வார்டு வரையறை தொடர்பான வழக்கு முடியும் வரை உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவோ, நடத்தவோ முடியாது. எனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கும், தேர்தலை நடத்துவதற்கும் கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் சில
  • பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு



  • கரூரில் 4வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு செந்தில் பாலாஜி நண்பர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்: நிதி நிறுவனத்துக்கு சீல்



  • அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய்



  • செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ரெய்டு எதிரொலி டிடிவி தினகரன் ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பீதி: வருமானவரித்துறையும் ஆவணங்களை சேகரிப்பதாக தகவல்



  • அரசு தரப்பில் அழைப்பு இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்: இன்று மாலை முடிவு



  • டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த தென்காசி தொகுதி அதிமுக எம்பி முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவினார்



  • பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசு பரிசீலனை.



  • உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது



  • மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு : அப்ரூவராக மாறும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு சிபிஐ குறி



  • சாதி, மதவாதிகள் இங்கு காலூன்றினால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]