இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால் பேட்டி

9/15/2017 4:35:44 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

சென்னை: அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கிறார் நடிகர் விஷால். நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படம் திரைக்கு வந்துள்ளது. முன்னதாக இணையதளத்தில் புதிய படங்களின் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் இணைய தள எக்ஸ்பர்ட்களை வைத்து திருட்டுவிசிடி ஒளிபரப்புபவர்கள் யார் என்பதை கண்காணித்து வந்தார். இதுகுறித்து ஆதாரங்கள் திரட்டி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்கன் இணைய தள  நிர்வாகி கவுரி சங்கரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

விவசாயிகள் பிரச்னை, ஏழை மாணவ மாணவிகள் கல்வி போன்றவற்றுக்கு தனது ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலம் விஷால் வருகிறார். அரசியலில் குதிக்கும் எண்ணத்துடன் அவர் செயல்படுவதாக கூறப்பட்டு வந்தது.  இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இந்த விஷயத்தில் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு அதிகமாக நன்மை செய்ய முடியும். கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். நல்லது செய்வதுதான் அரசியல் என்றால் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். இந்த காலத்தில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று படிக்கின்றனர். இவர்களுக்கு பஸ் வசதி செய்து தந்தால் என்ன குறைந்துவிடப்போகிறது.

 ஒரு பக்கம் பணப் பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் சம்பளம் மட்டும் பல மடங்கு உயர்கிறது. உ.பி., மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யும் கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் அரசு செய்ய மறுக்கிறது. அரசியலுக்கு யார் வந்தாலும் மருத்துவம், கல்வி இரண்டும் இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு விஷால் கூறினார்.

மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]