இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காஞ்சி நகர தேமுதிக சார்பில் ஐம்பெரும் விழா: 1650 பேருக்கு நலத்திட்ட உதவி: எல்.கே.சுதீஷ் வழங்கினார்

9/15/2017 4:20:26 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகர தேமுதிக சார்பில், காஞ்சிபுரம்  காந்தி சாலை, பெரியார் நினைவுத்தூண் அருகில் வறுமை ஒழிப்பு தினம், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்விழா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்விழா, தேமுதிக 13ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 1650 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா  நேற்று நடந்தது. விழாவுக்கு, காஞ்சிபுரம் நகர தேமுதிக செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
 மாவட்ட அவைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் திருமால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பெர்ரி மற்றும் நிர்வாகிகள் கமலநாதன், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.

தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு,  மூன்று சக்கர சைக்கிள், இட்லி குண்டா, சைக்கிள் உள்ளிட்ட 1650 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதவிக்கு வர மக்கள் ஆசைப்படுகின்றனர். கடந்த கால தேர்தலின்போது கூட்டணி பேசுவதற்காக என்னை அழைத்தார்கள்.  மாலை 4  மணிக்கு அழைத்துவிட்டு அதிகாலை 3 மணி நேரம் வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இதனால் நான் கோபித்து கொண்டு வெளியில் வர முற்பட்டபோது, சசிகலாவும் ஜெயலலிதாவும் பேசினர். அதன்பிறகு 25 எம்எல்ஏ சீட் வழங்கினர்.

இதில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களில் 9 பேரை விலை கொடுத்து வாங்கினார்கள். ஆனால் இன்று ஒரு எம்எல்ஏகூட அவர்களது வீட்டில் இல்லாத சூழ்நிலை உள்ளது. மேலும் சொந்த செலவில் பிறந்தநாள் கொண்டாடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே. அண்ணா மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற தலைவராகவும் விஜயகாந்த் இருப்பார். இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.  

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், தலைமைக்கழக பேச்சாளர்கள் தம்பி முருகன், முகிலரசன், தீப்பொறி செல்வராஜ், மகாலட்சுமி ஆகியோரும் பேசினர். விழாவில், வட்ட செயலாளர்கள் அக்பர் பாஷா, விஜய், யுவராஜ், தனசேகர், அருணகிரி, மண்ணு, லோகநாதன், அருணாச்சலம், முருகன், ரமேஷ்குமார், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேமுதிக தலைமை கலை இலக்கிய அணி சார்பில் மதுரை நாராயணன் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்தது.

மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]