இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன: முகமது ஷமி உற்சாகம்

9/14/2017 3:59:19 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

கொல்கத்தா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடைபெறும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கூறுகையில், ‘’ஆஸ்திரேலியா கடினமான அணி. அவர்களை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன. ஆனால் அதை வெளியிட முடியாது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கான திட்டங்களும் எங்களிடம் உள்ளன.

முன்பு இருந்ததை விட ஆஸ்திரேலியா தற்போது மிகவும் வலுவாக உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து விட முடியும் என்று கூறுவது கடினமானது. எனினும் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளித்திருப்பது நல்ல விஷயம்தான்’’ என்றார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவை சேர்ந்தவரான முகமது ஷமி, முதல் முறையாக ஈடன் கார்டன் மைதானத்தில், ஒரு நாள் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளார். இது குறித்து முகமது ஷமி கூறுகையில், ‘’எனது ஹோம் கிரவுண்டில், ஒரு நாள் போட்டியில் விளையாடுவது பெருமைப்பட வேண்டிய விஷயம்’’ என்றார்.

மேலும் சில
  • இரு தரப்பு தொடர் விவகாரம்: பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது



  • உலக லெவன்-பாக். இடையே இன்று கடைசி டி.20 போட்டி



  • இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சந்தேகம்



  • டோனி ஸ்டைலில் முடித்தார்! போட்டியை நிறைவு செய்வது பழக்கமாகி விட்டது: உலக லெவன் வீரர் திசாரா பெரேரா பேட்டி



  • காமன்வெல்த் வலு தூக்கும் போட்டி சேலம் மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை: இனிப்பு வழங்கி தாய் கொண்டாட்டம்



  • உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு



  • ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு தொடர் ஓய்வு ஏன்?: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்



  • பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி தலைவர் கருத்து



  • மூன்று வகையான போட்டிகளுக்கும் தென் ஆப்ரிக்க கேப்டனாக டூ பிளெஸ்ஸிஸ் நியமனம்



  • உலக லெவன் தொடர் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை வீரர்களிடம் கூறினேன்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]