இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

குடிபோதையால் வந்த சோதனை தலையில் கல்லைபோட்டு மகனை கொன்றார் தாய்: திருவேற்காட்டில் பயங்கரம்

9/5/2025 4:08:22 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

பூந்தமல்லி: திருவேற்காட்டில் தலையில் கல்லை போட்டு மகனை கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார். சென்னை திருவேற்காடு கோலடி பகுதி அன்பு நகர் 1வது தெருவை சேர்ந்தவர் செந்தில் (32). இவர் லாரியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி  காமாட்சி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் செந்திலின் தாய் சரஸ்வதி (61) வசித்து வருகிறார்.செந்தில் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குடிபோதையில்தான் வருவாராம். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் கணவன்,  மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த தகராறு காரணமாக கோபம் அடைந்த காமாட்சி, அனகாபுத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு  3 பிள்ளைகளுடன் சென்று விட்டார்.

இதன்பிறகு செந்தில் மேலும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார். இது சரஸ்வதிக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.  ‘தினமும் குடித்து விட்டு மகன் தகராறு செய்கிறானே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே’ என்ற விரக்தியில் சரஸ்வதி இருந்திருக்கிறார். இந்நிலையில், நேற்றிரவு  இருவருக்கும் கடும் தகராறு நடந்துள்ளது. விரக்தி அடைந்த சரஸ்வதி, இரவில் சாப்பிடாமல் தூங்க சென்றுவிட்டார். இன்று அதிகாலையில் சரஸ்வதி எழுந்தபோது மகன்  மீதான ஆத்திரம் தீரவில்லை.
மகன் இருந்தால் மனைவிக்கும் தொந்தரவு நமக்கும் பிரச்னை என்று கருதிய சரஸ்வதி, வீட்டின் அருகே கிடந்த ஒரு பெரிய கல்லை தூக்கிவந்து செந்திலின் தலையில்  போட்டுள்ளார். பலத்த காயம் அடைந்த செந்தில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன்பிறகு நேராக திருவேற்காடு  காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்த  சரஸ்வதி, நடந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து சரஸ்வதியை கைது செய்தனர். குடிபோதையால் மகனையே தாய் கொலை செய்தது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் சில
  • கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்?



  • திருவள்ளூர் மின்வாரிய ஆபீசில் கொள்ளை முயற்சி



  • ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் காருடன் செம்மர கட்டைகள் பறிமுதல்



  • செங்கல்பட்டிலிருந்து புறப்பட்ட ரயிலில் பெண்ணிடம் 30 சவரன் கொள்ளை



  • எழும்பூரில் நள்ளிரவு பரபரப்பு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது தாக்குதல்: பைக்கில் தப்பிச்சென்ற 3 பேருக்கு வலை



  • திருப்பதி அருகே இன்று அதிகாலை ₹50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • காதல் திருமண விவகாரத்தில் பயங்கரம் மாப்பிள்ளையின் தாய் வெட்டி கொலை: பெண்ணின் தம்பி சரண்



  • விசாகப்பட்டினம் அருகே நூதன முறையில் ₹10லட்சம் கஞ்சா கடத்திய தமிழக லாரி டிரைவர் கைது



  • மீஞ்சூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: பெண்ணிடம் 5 பவுன் வழிப்பறி



  • சர்வதேச செம்மரக்கடத்தல்காரன் ஆந்திராவில் அதிரடி கைது: திருத்தணியை சேர்ந்தவர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]