இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

காதல் திருமண விவகாரத்தில் பயங்கரம் மாப்பிள்ளையின் தாய் வெட்டி கொலை: பெண்ணின் தம்பி சரண்

9/5/2025 3:50:20 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் கொடுக்கூரை சேர்ந்த சாமிதுரை மனைவி அஞ்சம்மாள்(40). இவரது மகன் விஜய்(25). அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் சங்கீதா(18). விஜயும்,  சங்கீதாவும் திருப்பூரில் வேலை செய்து வந்தனர். இவர்கள் தூரத்து உறவில் அண்ணன், தங்கை முறையாகும். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கி பழகினர்.  அவர்களிடையே காதல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் ஊரில் உள்ள பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். ஆனால், அவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி 10 நாள் முன்பு திருமணம்  செய்து கொண்டனர். தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.சில தினங்களுக்கு முன் சங்கீதாவின் 17 வயது தம்பி போனில் விஜயை தொடர்பு கொண்டு, ‘நமக்குள் என்ன முறை? நீ எப்படி என் அக்காவை திருமணம் செய்து  கொண்டாய்’ என கேட்டு இருக்கிறார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் விரோதம் ஏற்பட்டது.

நேற்று மதியம் கொடுக்கூரில் உள்ள முந்திரி காட்டில் அஞ்சம்மாள் விறகு சேகரித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த சங்கீதாவின் தம்பி, அஞ்சம்மாளிடம் ‘விஜய், சங்கீதா  எங்கு இருக்கின்றனர்’ என்று கேட்டார். ‘தெரியாது’ என அஞ்சம்மாள் கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சங்கீதாவின் தம்பி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஞ்சம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் அஞ்சம்மாள் அதே இடத்தில் இறந்தார்.  குவாகம் போலீசில் சங்கீதாவின் தம்பி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

மேலும் சில
  • கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்?



  • திருவள்ளூர் மின்வாரிய ஆபீசில் கொள்ளை முயற்சி



  • ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் காருடன் செம்மர கட்டைகள் பறிமுதல்



  • செங்கல்பட்டிலிருந்து புறப்பட்ட ரயிலில் பெண்ணிடம் 30 சவரன் கொள்ளை



  • எழும்பூரில் நள்ளிரவு பரபரப்பு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது தாக்குதல்: பைக்கில் தப்பிச்சென்ற 3 பேருக்கு வலை



  • குடிபோதையால் வந்த சோதனை தலையில் கல்லைபோட்டு மகனை கொன்றார் தாய்: திருவேற்காட்டில் பயங்கரம்



  • திருப்பதி அருகே இன்று அதிகாலை ₹50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • விசாகப்பட்டினம் அருகே நூதன முறையில் ₹10லட்சம் கஞ்சா கடத்திய தமிழக லாரி டிரைவர் கைது



  • மீஞ்சூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: பெண்ணிடம் 5 பவுன் வழிப்பறி



  • சர்வதேச செம்மரக்கடத்தல்காரன் ஆந்திராவில் அதிரடி கைது: திருத்தணியை சேர்ந்தவர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]