விசாகப்பட்டினம் அருகே நூதன முறையில் ₹10லட்சம் கஞ்சா கடத்திய தமிழக லாரி டிரைவர் கைது
9/5/2025 3:47:52 PM
சித்தூர்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து விஜயவாடா நோக்கி மினிலாரியில் கஞ்சா கடத்துவதாக போலீஸ் உதவி ஆணையர் பிரசாத்துக்கு நேற்று தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் விஜயவாடா போலீசார், கிருஷ்ணலங்கா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், தமிழ்நாடு பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, லாரியின் பின்புறம் கம்புகளை கட்டி நடுவில் அறைபோல் அமைக்கப்பட்டிருந்தது. கம்புகளை அகற்றி பார்த்தபோது, ₹10 லட்சம் மதிப்புள்ள 150 கஞ்சா பாக்கெட்கள் பதுக்கியிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், விசாகப்பட்டினம் மாவட்டம் அனக்காபள்ளியில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திச்செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவர் தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் சுந்தரம்பாடு கிராமத்தை சேர்ந்த மலையப்பன்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியுடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.