நெடுவாசலில் 135வது நாளாக போராட்டம்
8/24/2017 3:54:17 PM
ஆலங்குடி,: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி அப்பகுதி மக்கள் துவக்கினர். நேற்று திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 135வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அப்பகுதி பெண்கள் மற்றும் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.