இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகாரில் வருகிற 27ம் தேதியன்று லாலு நடத்தும் பேரணி: சோனியா, மாயாவதி புறக்கணிப்பு

8/24/2017 3:33:46 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

பாட்னா: பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து லாலு பிரசாத் நடத்தும் பிரமாண்ட பேரணியில் சோனியா காந்தி, மாயாவதி ஆகியோர் பங்கேற்கவில்லை. பீகாரில் லாலுவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் பாஜவுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கும் முனைப்பில் லாலு பிரசாத் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, வருகிற 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் வகையிலான பிரமாண்ட பேரணிக்கு லாலு ஏற்பாடு செய்துள்ளார்.

வருகிற 27ம் தேதியன்று தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள இந்த பேரணியில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்கவில்லை.  இவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பகுஜன் சமாஜ் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் சதிஷ் சந்திரா மிஷ்ரா பங்கேற்கின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமாருக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பீகாரில் தற்போது கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று பீகார் மாநில துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான சுசில் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாலு பிரசாத், பேரணி நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக பிரதமர் மோடி இங்கு வந்து வெள்ளப்பாதிப்பை பார்வையிடுவது ஏன்? என்றார். மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மோடி ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.   

மேலும் சில
  • பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு



  • அரசு இணையதளங்களுக்குள் ஊடுருவி ஆதார் தகவல்களை சுருட்ட அமெரிக்க உளவுத்துறை முயற்சி: விக்கி லீக்ஸ் பகீர் குற்றச்சாட்டு



  • மத்திய அமைச்சர் சுஷ்மாவை காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு போஸ்டர்



  • உ.பி.யில் வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு



  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்



  • தொடர் ரயில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு பணியில் 2 லட்சம் பேர்: ரயில்வே அமைச்சகம் திட்டம்



  • பீகாரில் மழை வெள்ளம் பலி எண்ணிக்கை 367 ஆனது: அசாம், உ.பி., மே.வங்கத்திலும் கடும் பாதிப்பு



  • முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டி: கோவா இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு



  • டெல்லியில் பன்றிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்



  • பீகாரில் உச்சக்கட்ட மோதல்: நாங்கள் தான் உண்மையான ஜேடியு: தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]