இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகாரில் மழை வெள்ளம் பலி எண்ணிக்கை 367 ஆனது: அசாம், உ.பி., மே.வங்கத்திலும் கடும் பாதிப்பு

8/24/2017 3:23:25 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

பாட்னா: பீகார் மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி நேற்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. இதே போல அசாம், உ.பி. மற்றும் மே.வங்கமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கும் வெள்ள பலி அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பீகார் மாநிலம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து இந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் வெள்ள சேதங்களை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார். இதன் பின்னர் இந்த மாநிலத்துக்கான மத்திய அரசின் நிவாரண உதவி குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல உத்தரபிரதேசத்திலும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேபாளத்திலிருந்து பாய்ந்தோடி வரும் நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் பல மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

இந்த மாநிலத்தில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். 2800 கிராமங்களை சேர்ந்த 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசிய  பேரிடர் மீட்பு படை ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ன.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். மே.வங்கமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மால்டா மாவட்டத்தில் நிலைமை இன்னும் சீராகவில்லை. சில பகுதிகளில் மட்டும் ெவள்ள நீர் வடிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சில
  • பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு



  • அரசு இணையதளங்களுக்குள் ஊடுருவி ஆதார் தகவல்களை சுருட்ட அமெரிக்க உளவுத்துறை முயற்சி: விக்கி லீக்ஸ் பகீர் குற்றச்சாட்டு



  • மத்திய அமைச்சர் சுஷ்மாவை காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு போஸ்டர்



  • உ.பி.யில் வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு



  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்



  • பீகாரில் வருகிற 27ம் தேதியன்று லாலு நடத்தும் பேரணி: சோனியா, மாயாவதி புறக்கணிப்பு



  • தொடர் ரயில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு பணியில் 2 லட்சம் பேர்: ரயில்வே அமைச்சகம் திட்டம்



  • முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டி: கோவா இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு



  • டெல்லியில் பன்றிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்



  • பீகாரில் உச்சக்கட்ட மோதல்: நாங்கள் தான் உண்மையான ஜேடியு: தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]