இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் 42 பந்துகளில் சதம்; அப்ரிடி மிரட்டல்

8/23/2017 4:58:59 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

டெர்பி: நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. டெர்பி-யில் நடந்த முதல் கால் இறுதி போட்டியில், ஹாம்ப்ஷையர்-டெர்பிஷையர் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெர்பிஷையர் கேப்டன் கேரி வில்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் களமிறங்கிய ஹாம்ப்ஷையர் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 101 ரன்கள் (43 பந்துகள், 10 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். சதம் விளாச அவருக்கு 42 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது. இதன்பின் களமிறங்கிய டெர்பிஷையர் 19.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் ஹாம்ப்ஷையர் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது வென்ற ஷாகித் அப்ரிடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 கிரிக்கெட் உலகில் அதிரடி வீரராக கருதப்படுபவர் ஷாகித் அப்ரிடி. ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசியவர் என்ற சாதனை ஷாகித் அப்ரிடியிடம்தான் இருந்தது. 1996ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நைரோபியில் நடந்த போட்டியில் ஷாகித் அப்ரிடி வெறும் 37 பந்துகளில் சதம் கடந்தார். அதுதான் ஷாகித் அப்ரிடி விளையாடிய முதல் இன்னிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.  ஷாகிப் அப்ரிடியின் முதல் போட்டி கென்யாவுக்கு எதிரானது என்றாலும் கூட, அந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாட்களாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் 2014ம் ஆண்டு தகர்த்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குயின்ஸ்டவுனில் நடந்த போட்டியில் கோரி ஆண்டர்சன் வெறும் 36 பந்துகளில் சதம் கடந்தார். ஓராண்டுக்கு பிறகு (2015ம் ஆண்டு) தென் ஆப்ரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் இந்த சாதனையை தனதாக்கி கொண்டார். ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் வெறும் 31 பந்துகளில் சதம் விளாசினார்.

மேலும் சில
  • ஆர்தரின் நடத்தையை சகிக்க முடியவில்லை: பிசிபி நோட்டீசுக்கு உமர் அக்மல் பதில்



  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தால் மட்டும் எங்களால் வெற்றிபெற முடியாது



  • புரோ கபடி லீக்; போராடி டை செய்த தமிழ் தலைவாஸ்



  • தொடர் போட்டிகள் டோனிக்கு உத்வேகம் அளிக்கும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • துளிகள்



  • பல்லேகலெவில் நாளை 2வது ஒன்டே: பரிதாப இலங்கை... பந்தாட: காத்திருக்கும் கோஹ்லி & கோ



  • இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் ஆக்ரோஷம், நம்பிக்கை இல்லை



  • வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சுனில்ஜோஷி நியமனம்



  • துளிகள்



  • கவுன்டி போட்டியில் ஆடுவது டெஸ்ட்டில் ரன் குவிக்க உதவுகிறது: புஜாரா பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]