இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை: மத்திய அரசு முடிவு

8/14/2017 6:16:44 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

மும்பை: பயணிகள் நலன் கருதி, ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, கிழக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.  ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும், சிறந்த முறையில் பராமரிக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ரயிலில் பயணம் மேற்கொள்வோர் உடல்நலனை கருத்தில் கொண்டு மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கிழக்கு ரயில்வேக்கு சொந்தமான 10 ரயில் நிலையங்களில் செயல்பட உள்ள இதற்கு, ‘ஒரு ரூபாய் கிளினிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது மருத்துவரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். இசிஜி ரூ.50ல் எடுக்கலாம்.  இதுபோன்று குறைந்த கட்டணத்தில் பரிசோதனை, சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கிளினிக்குகள் இயங்கவுள்ளன. தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது இந்த கிளினிக்கில் கட்டணம் மிகமிக குறைவு.

முதல்கட்டமாக 10 ரயில் நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் இயங்கும். இதைத்தொடர்ந்து, மேற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் 24 ரயில் நிலையங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 10ம் தேதியன்று, மும்பையில் உள்ள காத்கோபர் ரயில் நிலையத்தில், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கிளினிக் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ம.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி



  • சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைச்சர்கள் பயன்பாட்டுக்கு 1000 பேட்டரி கார்கள்: மத்திய அரசு முடிவு



  • உ.பி.யில் 100 குழந்தைகள் பலியான சம்பவம்: நீதி விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு



  • டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு



  • பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு



  • குஜராத்தில் இந்தாண்டு மட்டும் பன்றி காய்ச்சலுக்கு 208 பேர் பலி



  • ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை தவறு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • எல்லையில் பாக். ராணுவ அத்துமீறல்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்



  • தூய்மை இந்தியா பட்டியலில் திருப்பதிக்கு முதல் இடம்: சந்திரபாபு நாயுடு உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]