இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு பலி 48 ஆனது: மலைப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

8/14/2017 6:11:53 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை


மாண்டி: இமாச்சல பிரதேசத்தில்  நிகழ்ந்த நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, மிம்ன்சார வசதி, செல்போன் உள்ளிட்ட வசதிகள் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.தவிர கன மழையால் மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள் , கால் நடைகள் என உடைமைகளை இழந்து மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். குறிப்பாக இமாச்சல பிரதேச மாநிலம் கன மழையால் பயங்கர பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இமாச்சல மாநிலம் பெரும் பகுதி மலைப்பரப்புகளால் ஆனதால் கன மழைக்கு  பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாநிலத்தின் முக்கிய மாவட்டமான மாண்டியிலுள்ள பதான் கோட் பகுதிக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டியிருந்த பேருந்துகள், வாகனங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கியது. நிலச்சரிவு உண்டாகி மலையில் இருந்த மண் மற்றும் பாறைகள் உருண்டு வாகனங்கள் மீது விழுந்ததால், வாகனங்கள் நிலைதவறி 900 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்து மற்றும் கார்களில் பயணமான நபர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.  பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பள்ளத்தாக்கில் கிடந்த வாகனங்களை மீட்டு வருகின்றனர்.  நிலச்சரிவில் கவிழ்ந்த வாகன விபத்தில் இதுவரை 48 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு வந்த போதும்,   தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புக் குழுவினரால் துரிதமாக செயல்பட முடியவில்லை. பள்ளத்தாக்குப் பகுதி என்பதால் மழை நீர் வெள்ளமாக பாய்ந்து வருவதாலும், அடிக்கடி பாறைகள், மண்கள் சரிந்து விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் மீட்புக் குழுவினர் மத்தியில் தேக்கம் உண்டாகி இருக்கிறது. நிலச்சரிவு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ருபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார் முதல்வர் வீரபத்திரா சிங்.

மேலும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்பட்டு மண் சரிவும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இமாச்சல மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அம்மாநில அரசு சிக்கலான மலை வழிப் பாதைகளில் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளது.

மேலும் சில
  • ம.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி



  • சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைச்சர்கள் பயன்பாட்டுக்கு 1000 பேட்டரி கார்கள்: மத்திய அரசு முடிவு



  • உ.பி.யில் 100 குழந்தைகள் பலியான சம்பவம்: நீதி விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு



  • டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு



  • பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு



  • குஜராத்தில் இந்தாண்டு மட்டும் பன்றி காய்ச்சலுக்கு 208 பேர் பலி



  • ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை தவறு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • எல்லையில் பாக். ராணுவ அத்துமீறல்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்



  • தூய்மை இந்தியா பட்டியலில் திருப்பதிக்கு முதல் இடம்: சந்திரபாபு நாயுடு உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]