காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ க.சுந்தர் அழைப்பு
8/14/2017 3:06:34 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் பவள விழா மாளிகையில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்றார். நிர்வாகிகள் வசந்தமாலா, சுகுமார், வக்கீல் எழிலரசன், ஆர்.டி.அரசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முரசொலியின் பவள விழாவை, செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பாக நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன் காக்க வருகிற 16ம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக முதன்மை செயலாளர் துரைமுருகன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதால் அனைத்து கட்சி நிர்வாகிகள், தோழர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், சேகரன், நெசவாளர் அணி அன்பழகன், தொண்டர் அணி சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர்கள் விடால் ராமலிங்கம், கே.ஏ.செங்குட்டுவன், ஒன்றிய நகர செயலாளர்கள் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், பி.எம்.குமார், ஜானசேகரன் க.செல்வம். பி.சேகர், டி.குமார், கே.எஸ்.ராமச்சந்திரன், வி.தரன், க.குமணன், தம்பு, சரணவன். பேரூர் செயலாளர்கள் என்.பாண்டியன், எஸ்.இனியரசு. ஜெ.வி.விஜயகணபதி, எஸ்.விஜயகணபதி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் பா.அப்துல் மாலிக், எல்.அபுசாலி, சோழனூர் மா.ஏழுமலை, மு.வேதாசலம், வெளிக்காடு ஏழுமலை, எல்.எஸ்.ரவிந்திரநாத், இ.அசோகன், டி.ஜெய்கணேஷ், ஏ.என்.பாரத், சுந்திரவரதன், இளங்கோவன்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எழிலரசன், பெ.மணி, யுவராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் எல்லப்பன், கே.குமார், டி.விஜயகுமார், ஆறுமுகம், காஞ்சிபுரம் நகர நிர்வாகிகள் எஸ்.சந்துரு, கருணாநிதி, வ.ஜெகநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எம்.எஸ்.சுகுமார், சாலவாக்கம் எஸ்.ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.