அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ
8/11/2025 3:24:12 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ள ஒரு வாட்ஸ் அப் குரூப் உள்ளது. இந்த குரூப்பில் நேற்று முன்தினம் 24 வினாடிகள் நீடிக்கும் ஒரு இளம்பெண்ணின் ஆபாச வீடியோ வெளியானது. இதை பார்த்த முக்கிய பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குரூப்பில் உறுப்பினராக உள்ள அமைச்சரின் அலுவலக ஊழியர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த ஊழியரிடம் முதல்வர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கப்பட்டது.
அப்போது அவர் முதல்வர் பினராய் விஜயனின் அலுவலகத்தில் உள்ள ஒருவர் தான் தனக்கு வீடியோவை அனுப்பி வைத்தார். தவறுதலாக அமைச்சர்களின் குரூப்புக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆபாச வீடியோவை பகிர்ந்த முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.