பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு
8/8/2025 4:06:14 PM
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த நொச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி விடுதியில் தங்கி கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி பள்ளி முடிந்ததும் அரசு பேருந்தில் ஏறி கொடுந்துறை பஸ் டாப்பில் இறங்கி நொச்சிமேடு கிராமத்துக்கு மாலை சுமார் 6 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாவடிப்பட்டு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் அன்பரசன்(23) என்பவர் மாணவியை அருகில் உள்ள கரும்பு காட்டுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி கள்ளக்குறிச்சி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவியை, அதே பகுதியை சேர்ந்த பிரவின்குமார்(20) என்பவர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், பிரவின்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.