சிறந்த நடிகர்-நடிகை-படங்களுக்கு 6 ஆண்டுக்கான சினிமா விருது அரசு அறிவிப்பு
7/14/2017 3:46:18 PM
சென்னை: 6 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ் திரையுலகிற்கான மாநில அரசு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ் திரையுலகிற்கான விருதை மாநில அரசுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை நேற்று ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு சிறந்த படம் முதல் பரிசு பசங்க. 2வது பரிசு மாயாண்டி குடும்பத்தார். 3வது பரிசு அச்சமுண்டு அச்சமுண்டு. சிறந்த நடிகர் கரண் (மலையன்). சிறந்த நடிகை பத்மப்ரியா (பொக்கிஷம்). இயக்குனர் வசந்தபாலன் (அங்காடிதெரு). இசை சுந்தர்.சி.பாபு (நாடோடிகள்). 2010 ஆண்டு சிறந்த படம் முதல்பரிசு மைனா. 2வது பரிசு களவாணி. 3வதுபரிசு புத்ரன். சிறந்த நடிகர் விக்ரம் (ராவணன்), சிறந்த நடிகை அமலாபால் (மைனா). இயக்குனர் பிரபுசாலமன் (மைனா). இசை யுவன் சங்கர் ராஜா (மைனா).
2011ம் ஆண்டு சிறந்த படம் முதல்பரிசு வாகை சூடவா. 2வதுபரிசு தெய்வத் திருமகள். 3வது பரிசு உச்சிதனை முகர்ந்தவன். சிறப்பு பரிசு மெரினா. நடிகர் விமல் (வாகை சூடவா). நடிகை இனியா (வாகை சூடவா). இயக்குனர் விஜய் (தெய்வத் திருமகள்). இசை ஹாரிஸ் ஜெயராஜ் (கோ). 2012 சிறந்த படம் முதல் பரிசு வழக்கு எண் 18/9. 2வது பரிசு சாட்டை, 3 வது பரிசு தோனி. சிறப்பு பரிசு கும்கி. நடிகர் ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்). நடிகை லட்சுமி மேனன் (கும்கி). இயக்குனர் பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9). இசை இமான் (கும்கி). 2013ம் ஆண்டு சிறந்த படம் முதல் பரிசு ராமானுஜன். 2வது பரிசு தங்க மீன்கள். 3வதுபரிசு பண்ணையாரும் பத்மினியும். சிறப்பு பரிசு ஆள். நடிகர் ஆர்யா. நடிகை நயன்தாரா (ராஜா ராணி). இயக்குனர் ராம் (தங்கமீன்கள்). இசை ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்).
2014 சிறந்த படம் முதல் பரிசு குற்றம் கடிதல். 2வது பரிசு கோலிசோடா. 3வது பரிசு நிமிர்ந்து நில். சிறப்பு பரிசு காக்கா முட்டை. நடிகர் சித்தார்த் (காவிய தலைவன்), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை). இயக்குனர் ராகவன் (மஞ்சப்பை). இசை ஏ.ஆர்.ரகுமான் (காவிய தலைவன்). மேற்குறிப்பிட்டவை தவிர பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். சிறந்த படத்துக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம். 2ம் பரிசு ரூ. 1 லட்சம். 3ம் பரிசு ரூ. 75 ஆயிரம். சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 5 பவுன் தங்க பதக்கம். நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. மகளிர் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கு சிறப்பு பரிசாக 1.25 லட்சம் ரொக்கம், நினைவுபரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.