மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணுடன் உல்லாசம் தடகள வீரர் பரபரப்பு வாக்குமூலம் : பல பெண்களுடன் தொடர்பா?
7/10/2025 3:21:21 PM
சென்னை : சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் லட்சுமி(22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை எழும்பூரில் தடகள பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
தடகள பயிற்சி மையத்தில் டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரை சேர்ந்த தீபக்(எ)டேனி (22) பயிற்சி பெற்று வந்தார். தடகள பயிற்சி மையத்திற்கு லட்சுமி அடிக்கடி வந்துசென்றால் தீபக் நட்பாக பழகினார். பின்னர் காதலித்துள்ளனர். இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக லட்சுமி தீபக்கிடம் பேசாமல் இருந்துள்ளார். பல முறை தீபக் நேரிலும் செல்போனில் தொடர்பு கொண்டபோது லட்சுமி பதில் அளிக்க வில்லை.
இதற்கிடையே லட்சுமி, காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் லட்சுமிக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் தீபக் லட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமி, ‘’பெற்றோர் பார்க்கும் நபரைதான் திருமணம் ெசய்ய ேபாகிறேன்’’ என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபக், லட்சுமியுடன் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார். லட்சுமிக்கு பார்த்த மாப்பிள்ளைக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி ைவத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து லட்சுமியின் பெற்றோர், தீபக் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக்கை நேற்று முன்தினம் கைது கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் தீபக் அளித்த வாக்குமூலம்: எழும்பூரில் உள்ள தடகள பயிற்சி மையத்தில் கடந்த 2 வருடங்களாக பயிற்சி பெற்று வந்ேதன். பயிற்சி மையத்தின் உரிமையாளர் மகள் லட்சுமிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் லட்சுமி கல்லூரிக்கு செல்ல நேரம் ஆனதால் அவரது தந்தை லட்சுமியை கல்லூரியில் விடும் படி கூறினார். நான் லட்சுமியை எனது பைக்கில் ஏற்றிகொண்டு கல்லூரியில் விட்டேன். அப்போது அவரது செல்போன் என்னை நான் வாங்கி கொண்டேன். பிறகு நான் ஒரு நாள் இரவு லட்சுமிக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அதற்கு அவர் உடனே பதில் அளித்தார். பிறகு லட்சுமியை அவரது தந்தைக்கு தெரியாமல் தினமும் அவரை கல்லூரிக்கு அழைத்து சென்று வந்தேன். சில நாட்கள் கழித்து நான் லட்சுமிக்கு வாட்ஸ் அப் மூலம் காதலை தெரிவித்தேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். இருவரும் பல இடங்களில் சுற்றி வந்தோம். அவரது உடல் வாகை பார்த்து நான் அவர்மீது ஆசை ெகாண்டேன். பயிற்சி கற்றுகொடுப்பது போல் அவர் உடல் மீது கை வைப்பேன். அவர் எதிர்ப்பும் தெரிவிக்கமாமல் இருப்பார்.
லட்சுமிக்கு ஒரு நாள் போன் செய்து, முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் எதுவும் கூறாமல் எங்கு வர வேண்டும் என்று கூறினார். நான் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். உடனே அவர் வந்தார். நாங்கள் ஒன்றாக பைக்கில் சென்றோம். தீபக் தனது நண்பர் அறைக்கு சென்றதும் அங்கிருந்து அவரது நண்பர்கள் நாங்கள் பிறந்த நாள் கேக் வாங்கி வருகிறோம் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். அப்போது நாங்கள் இருவர் மட்டும் தனியாக இருந்தோம்.
அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து லட்சுமிக்கு கொடுத்தேன். அதை குடித்த லட்சுமி சிறிது நேரத்தில் மயங்கினர். அதை பயன்படுத்தி லட்சுமியுடன் உல்லாசமாக இருந்தேன். அதை என் செல்போனில் பல கோணங்களில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் ரகசியமாக வைத்து கொண்ேடன். மயக்கம் தெளிந்ததும் ஆடைகள் அனைத்தும் கலைந்து கிடப்பதை பார்த்து லட்சுமி ஏதோ தப்பு நடந்துள்ளது என்று உறுதி படுத்தி கொண்டு என்னிடம் கேட்டார். அதற்கு நான் தான் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன்.
திருமணத்திற்கு முன் நாம் ஒன்றாக இருந்தால் தப்பு இல்லை என்று கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி என்னிடம் தகராறு செய்து, இந்த சம்பவம் குறித்து நான் என் பெற்றோரிடம் கூறி என்னை போலீசில் பிடித்து கொடுப்பேன் என்று கூறினார். அதோடு நானும் லட்சுமியும் பிரிந்து இருந்தேன். இதற்கிடையே லட்சுமிக்கு அவரது தந்தை திருமணம் செய்ய முயற்சி செய்து வந்தார். நான் வீடியோவை காட்டி இன்டர்நெட்டில் பதிவு ஏற்றம் செய்து விடுவேன் என்று கூறி லட்சுமியை பல முறை அழைத்து உல்லாசமாக இருந்தேன். லட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்ய முடிவு செய்யனர். உடனே நான் லட்சுமியை திருமணம் செய்து கொள்ளும் நபரை செல்போன் என்னை நண்பர்கள் மூலம் வாங்கி அவரது செல்போனுக்கு வீடியோ அனுப்பினேன். அதை பார்த்து அந்த நபர் லட்மியின் திருமணம் நிறுத்தி விட்டார். இதுகுறித்து லட்சுமியின் தந்தைக்கு தெரியவந்ததும் என் மீது போலீசில் புகார் அளித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.