இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

7/8/2025 3:31:02 PM
அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்

புதுடெல்லி : காஷ்மீரில் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையது காலமான பிறகு அனந்தநாக் தொகுதி எம்பியாக இருந்த அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் அனந்த்நாக் மற்றும் நகர் தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. நகர் தொகுதியில் போட்டியிட்ட எதிர்கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த அனந்தநாக் தொகுதி இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மே 25ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் காஷ்மீரில் நிலைமை சீரடையாமல் போகவே மீண்டும் அனந்தநாக் இடை தேர்தலை கடந்த மே 2ம் தேதி ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த சூழலில் அனந்தநாக் இடைதேர்தல் மேலும் காலதாமதமாகலாம் என தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி கூறுகையில், அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பாதுகாப்பு நிலவரங்கள் இன்னும் சீராகவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் தற்போது அமர்நாத் யாத்திரை, சுற்றுலா சீசன், திருவிழாக்கள், பண்டிகைகள் காலமாகும். எனவே இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக கூடுதல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தேர்தலை நடத்தினால் மேலும் படையினர் தேவைப்படும். எனவே தேர்தலை அக்டோபரில் நடத்தலாமா என தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது என்றார். அதே போல் தமிழகத்தில் ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலும் கடந்த ஏப்ரலில் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே. நகர் தொகுதி இடை தேர்தலை நீண்ட காலத்திற்கு தாமதபடுத்த முடியாது. எனவே விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது என்றார்.

மேலும் சில
  • அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்



  • பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை



  • கெஜ்ரிவாலுடன் எவ்வித தொடர்பும் இல்லை: அன்னா ஹசாரே பேச்சு



  • சுவிட்சர்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி: பொருளாதார மாநாட்டில் நாளை மறுதினம் பங்கேற்பு



  • எல்ஐசி பாலிசிக்கும் ஆதார் கட்டாயம் : மத்திய அரசு கெடுபிடி



  • பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களின் புகைப்பட அருங்காட்சியகம் : அமைச்சர் தகவல்



  • 2017ம் ஆண்டில் 213 தீவிரவாதிகள் கொலை : காஷ்மீர் முதல்வர் மெகபூபா தகவல்



  • கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு



  • வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : ரயில் சேவை பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]