இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சைதை தொகுதி திமுக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு திட்டம் : மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

6/30/2017 3:17:11 PM
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

சென்னை : சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு திட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: சைதை தொகுதியில் வசிக்கும் மக்கள் அவரவர் பிறந்தநாளில் அவர்கள் வசிக்கும் தெருவில் நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை நட்டுத்தரும் சிறப்புத் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது. சென்னையில் 6.5 சதவீதமாக இருந்த பசுமை பகுதி சமீபத்தில் ஏற்பட்ட வர்தா புயலால் 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது. சென்னையில் பசுமையை மீட்டெடுக்கும் வகையில் மேற்கண்ட சிறப்பு திட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி.நிர்மல், மரவங்கி அமைப்பு நிறுவனர் முல்லைவனம், நடிகர்கள் மயில்சாமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் அதிக உறுதித்தன்மை வாய்ந்த வேப்பமரம், புங்கை, பூவரசம், அத்தி, நாவல் உள்ளிட்ட மரங்கள் நடப்படும். ஒருவருட காலம் நல்ல முறையில் தொடர்ந்து பராமரிப்பவர்களுக்கு பசுமை ‘’பாதுகாவலர் விருது’’ வழங்கப்படும். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரம் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள், சைதை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை(ஜோன்ஸ் சாலை, மாந்தோப்பு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகில், சைதாப்பேட்டை, சென்னை-15, செல்போன்-9566209124. 9566209125) நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டால் மரக்கன்று நட்டுத்தரப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் சில
  • மாவட்டம்தோறும் செயல்வீரர் கூட்டம் : டிடிவி தினகரன் முடிவு



  • புத்தாண்டு கொண்டாட்டம் டாஸ்மாக் கடைகளில் ரூ.195 கோடிக்கு மதுவிற்பனை



  • கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தது



  • தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்



  • தஞ்சையில் கவர்னர் ஆய்வு: திமுகவினர் கருப்புக்கொடி



  • சட்டப்பேரவை கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது



  • பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட அதிமுக மாஜி எம்எல்ஏ எஸ்கேப்



  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]