இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா

6/29/2017 5:19:21 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

வாஷிங்டன் : அமெரிக்காவுடன் நெருக்கமான குடும்ப உறவு வைத்திருப்பவர்கள் அல்லது வர்த்தக உறவு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என முஸ்லிம் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாட்டை டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து அவரது அரசு, குடியேற்றத்துறை மற்றும் வெளியுறவுத்துறையில் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறது. அமெரிக்காவிற்குள் நுழைய விரும்புவர்களுக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் டிரம்ப் அரசு அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.

தற்போது டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் முக்கியமாக சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஈரான், ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவதில் புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதில் அமெரிக்காவில் நெருங்கிய குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்கள், வர்த்தக உறவுகளை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். இவர்கள் தங்களது உறவினர்கள் தான் என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் அந்த உத்தரவில் சுட்டி காட்டியுள்ளது.

இதுதொடர்பாக தூதரகங்களுக்கு டிரம்ப் அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள், விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, தங்களது நெருக்கமான குடும்ப உறுப்பினர்களான பெற்றோர், வாழ்க்கை துணைவர், குழந்தை, மகன் அல்லது மகள், சகோதரர்கள் ஆகியோர் இருப்பதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும். தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, மாமா, அத்தை, மருமகள், மருமகன், ஒன்று விட்ட சகோதரன் அல்லது சகோதரி ஆகியோரை குடும்ப உறுப்பினர்களாக கருத முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் தடை தளர்த்தியதை தொடர்ந்து புதிய உத்தரவை டிரம்ப் அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை



  • உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு



  • அமெரிக்காவில் ரயில் விபத்து 3 பேர் பலி, 50 பேர் காயம்



  • ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்



  • இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்



  • ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்



  • இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு



  • ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்



  • வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா: லண்டன் கோர்ட்டில் இந்திய வக்கீல் வாதம்



  • ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]