இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்

6/28/2017 3:59:45 PM
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்

புதுச்சேரி : புதுச்சேரி முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக பெற்றோர், மாணவர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அரசின் இடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக சேர்க்கை குழு மீது குற்றம் சாட்டினர்.  மாணவர் சேர்க்கை விவகாரத்தில், புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆட்சியாளர்கள் மீது கிரண்பேடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, மாணவர் சேர்க்கையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இதனை நிரூபிக்க முடியுமா? என சவால் விடுத்தார். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதாகவும், அவர் மீது வழக்கு தொடர்வேன் என எச்சரித்தார்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலாப்பட்டு பொறியியல் கல்லூரியில் உள்ள சென்டாக் அலுவலகத்துக்கு வந்தனர். சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜ், இணை கன்வீனர் பழனிராஜா, கருணாகரன் உள்ளிட்டோரிடம் ஆவணங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு தேவைப்படும் முக்கிய கோப்புகளையும் கைப்பற்றினர். கல்லூரி வாரியாக மொத்தமாக சேர்க்கை ஆணை பெற்றவர்கள் எத்தனை பேர், அரசின் இடங்களில் எந்தெந்த கல்லூரிக்கு எவ்வளவு இடங்கள், அரசின் இடங்களில் சேர்க்கை ஆணை பெற்றவர்கள், மாணவர்களை சேர்க்க மறுத்த கல்லூரிகள் உள்ளிட தகவல்களை கேட்டறிந்தனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7.15 மணி வரை 8 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. சோதனையை முடித்து வெளியேறிய சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து 2 அட்டை பெட்டிகள் மற்றும் 3 பைகளில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றனர். தொடர்ந்து புதுவையிலேயே முகாமிட்டுள்ள சிபிஐ, 2வது நாளாக இன்றும் சென்டாக் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது. புதுவை தலைமை செயலகத்தில் 2வது நாள் விசாரணையை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிகள், இவ்விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளன. இதுதவிர ஒவ்வொரு தனியார் கல்லூரிக்கும் நேரடியாக சென்று சிபிஐ சோதனை நடத்த தயாராகி வருவதால் அரசு அதிகாரிகள், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கலக்கமடைந்துள்ளன. மேலும் முறைகேடாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் குறித்த விபரங்களையும் சிபிஐ திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ நடத்திய சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள கவர்னர் கிரண்பேடி, மோசடியில் ஈடுபட்டவர்களின் முகத்திரை கிழியும் என்று குறிப்பிட்டுள்ளார். கிரண்பேடி பரிந்துரையை ஏற்று சிபிஐ புதுவையில் முகாமிட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது



  • கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு



  • மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்



  • 2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக அணி வலுப்பெறும்: திருமாவளவன் பேட்டி



  • ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன?: அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரி கேள்வி



  • கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்



  • கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • ஜெ. சிகிச்சை முழு வீடியோ வெளியிட மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்



  • மதுரை, சிவகங்கையில் ஆய்வு மேற்கொள்ளவில்லை எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் கவர்னர் பின்வாங்கினாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]