இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது

6/28/2017 3:58:25 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

கடலூர் : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குறிஞ்சிகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை (32). இவரது உறவினர் நதியா (22). இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பாவாடை வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், நதியாவுக்கு அருகில் உள்ள எரும்பூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு குறிஞ்சிகொல்லை கிராமத்துக்கு திரும்பிய பாவாடை தனது மனைவி கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து கடலூரில் மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மனு கொடுத்தார். தொடர்ந்து சமூகநலத்துறை மூலம் பாவாடையின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் நேற்று கடலூரில் குடும்ப நல நீதிமன்றம் மூலம் இருதரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று பிற்பகல் பாவாடை, நதியா, கள்ளக்காதலன் சுபாஷ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கடலூர் வந்தனர். தனக்கு துரோகம் செய்த மனைவியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாவாடை, நீதிமன்றம் எதிரே வீச்சரிவாளுடன் மறைந்திருந்தார். அப்போது நீதிமன்றத்துக்கு வந்த நதியாவை கண்டதும், ஓடிவந்து சரமாரியாக வெட்டினார். இதனை பார்த்ததும் நதியாவுடன் வந்த சுபாஷின் தாய் மஞ்சுளா (50) தடுக்க வந்தார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புதுநகர் போலீசார், பாவாடையை கைது செய்தனர். மேலும் சரமாரியாக வெட்டப்பட்ட நதியா மற்றும் மஞ்சுளா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெட்டப்பட்ட நதியா தற்போது 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]