இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்

6/27/2017 4:12:55 PM
நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

செந்துறை : அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளசிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கணவனால் கைவிடப்பட்டவர். இவரது 2 மகன்களும் தந்தையுடன் சென்று விட்டதால் அ்நத பெண் தனது தாய் வீட்டுடன் வந்து கூலி வேலை செய்து வருகிறார். கணவனால் கைவிடப்பட்டவர் என்ற அடிப்படையில் இவருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வந்து கொண்டிருந்தது. அந்த தொகை சிலமாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது. மகன்கள் இருப்பதால் உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. அந்த பெண் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை(விஏஓ) சந்தித்து, மகன்கள் இருவரும் என்னிடம் இல்லை. தந்தையுடன் தான் இருக்கிறார்கள். எனவே எனக்கு உதவித்தொகை பெற தகுதி உண்டு, ஏன் நிறுத்தினீர்கள் என விஏஓவிடம் முறையிட்டு உள்ளார்.

அதற்கு அந்த விஏஓ, தனது ஆசைக்கு இணங்கும்படி அந்த பெண்ணை நிர்ப்பந்தம் செய்து வந்து உள்ளார். அடிக்கடி போன் மூலமும் அந்த பெண்ணிடம் விஏஓ செக்ஸ் டார்ச்சர் கொடுத்து உள்ளார். இதனால் வெறுத்து போன அந்த பெண், விஏஓ செல்போன் பேச்சை டேப் செய்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உள்ளார். ‘அரசாங்கம் உங்களுக்கு தான் சம்பளம் கொடுக்கிறதே, உங்க மகள் போல இருக்கிற என்னிடம் இப்படி பேசலாமா?’ என அந்த பெண் கேட்கிறார். அதற்கு விஏஓ, ‘அரசாங்கம் சம்பளம் கொடுக்குது, நீ எனக்கு என்ன கொடுக்க போற’ என்று பேச்சை தொடங்குகிறார். அதற்கு அந்த பெண் ‘இதற்கெல்லாம் வேறு ஆளைப்பார். எனக்கு பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை’ என காட்டமாக பேசுகிறார். செந்துறை பகுதியில் இப்போது அனைவரது  வாட்ஸாப்களிலும் இந்த ஆடியோ தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர், தாசில்தார், மற்றும் போலீசாரிடம் புகார் செய்யப்போவதாகவும் அந்த பெண் தெரிவித்து உள்ளார்.

மேலும் சில
  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



  • கைதான 8 பேர் கோர்ட்டில் இன்று ஆஜர்: கோவை ஏடிஎம் கொள்ளை கும்பல்: தலைவனை பிடிக்க தனிப்படை



  • உ.பியில் பயங்கரம்: மைனர் பெண் தீ வைத்து எரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]