இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை

6/27/2017 4:03:53 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

ஆவடி : பட்டாபிராமில் வசித்துவரும் மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட 3 நாய்களை கொன்றுவிட்டு இந்த கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர். ஆவடி அருகே பட்டாபிராம் சத்திரம் டீச்சர்ஸ் லேன் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (65). இவர் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி சிவகாமி (60). இவர்களுடன் மகன் சதாசிவம், மருமகள் நித்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று காலை வாசுதேவன், சிவகாமி ஆகியோர் ஆழ்வார்திருநகரில் உள்ள உறவினர் வீட்டு சீமந்த நிகழ்ச்சிக்கு சென்றனர். இதன்பிறகு சதாசிவம் வேலைக்கு சென்றார். நித்யா, வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டுக்கு வெளியே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்துவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

இந்நிலையில், மாலையில் வாசுதேவன் வீட்டுக்கு வந்து கதவை திறந்து சென்றார். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மறைவில் வைத்திருந்த 30 பவுன் நகைகள் கொள்ைளயர்கள் கண்ணில் சிக்கவில்லை. மேலும் வாசுதேவன் வீட்டில் வளர்க்கப்பட்ட  3 நாய்களையும் காணவில்லை. இவற்றை கொள்ளையர்கள் அடித்து கொன்றார்களா, கடத்தி சென்றார்களா என்று தெரியவில்லை. அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்ட சாவியை கவனித்த நபர்கள், அவற்றை எடுத்து கதவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி வாசுதேவன் கொடுத்த புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]