இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்

6/21/2017 5:06:03 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிக்குள் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள், அங்கிருந்த மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவு பெற்ற குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. நாசவேலையில் ஈடுபட்டுவரும் இவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்சில் உள்ள பிக்கவ்யான் பகுதியில் இயங்கிவரும் பள்ளி ஒன்றில் இன்று காலை ஐஎஸ் தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு வகுப்பறைகளில் இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் சிலரை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். தகவலறிந்து ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதால், ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் மாணவர்களை மீட்க ராணுவத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பள்ளிக்குள் புகுந்திருக்கும் தீவிரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். வீரர்களும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். பள்ளிக்குள் புகுந்து மாணவ, மாணவிகளை தீவிரவாதிகள் பிடித்து வைத்திருப்பதால் பெற்றோர்கள், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் சில
  • பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை



  • உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு



  • அமெரிக்காவில் ரயில் விபத்து 3 பேர் பலி, 50 பேர் காயம்



  • ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்



  • இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்



  • ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்



  • இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு



  • ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்



  • வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா: லண்டன் கோர்ட்டில் இந்திய வக்கீல் வாதம்



  • ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]