இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை

6/20/2017 3:25:06 PM
நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கீழமாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(எ)மூர்த்தி(45). லாரி உரிமையாளர். இவரது மனைவி கவிதா(40). கவிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கவிதா கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே இருந்தார். ஆறுமுகம் வெளி நாட்டிற்கு சென்று மீண்டும் சொந்த ஊர் வந்தார். இருவரும் விவாகரத்து பெற்று கொள்வதற்காக நீதிமன்றத்தை அணுகினார்கள். தகவலறிந்த இருதரப்பு உறவினர்களும், இருவரையும் சமாதானம் செய்து வைத்து கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு கீழமாத்தூரிலிருந்து தாராசுரம் பகுதியில் குடியமர்த்தினர்.

கடந்த இருதினங்களாக இருவருக்கும் குழந்தை இல்லாதது குறித்து தகராறு ஏற்பட்டதால், கவிதா தனது தம்பி ராஜாவை அழைத்துள்ளார். நேற்று வீட்டிற்கு ராஜா வந்ததும், ஆறுமுகம் தகராறு செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். கவிதாவையும் அடித்துள்ளார். பலத்த காயமடைந்த ராஜா கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று, ‘என் அக்காவை கணவர் கொடூரமாக தாக்குகிறார், காப்பாற்றுங்கள்’ என்று கூறினார்.  அங்கு இருந்த போலீசார் ‘நீ போ, நாங்கள் வருகிறோம்’ என கூறிவிட்டு 20 நிமிடம் கழித்து வந்தனர். போலீசார் வீட்டிற்குள் வருவதற்குள், வீட்டின் கதவினை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு கவிதாவை, ஆறுமுகம் சரமாரியாக தொண்டை மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டினார்.

கவிதாவின் அலறல் சத்தம் கேட்ட போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அதற்குள் கவிதா இறந்து விட்டார். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். ‘ஆபத்தான நிலையில் ஒருவர் வந்து தகவல் தெரிவித்த நிலையிலும் போலீசார் உடனடியாக செல்லாதது ஏன்? விரைந்து சென்று இருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாமே, இதுபோன்ற அலட்சியம் போலீசாரிடம் இருக்க கூடாது’ என தஞ்சை எஸ்.பி. மகேஷ், குடந்தை தாலுகா போலீசாரை கண்டித்தார்.

மேலும் சில
  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



  • கைதான 8 பேர் கோர்ட்டில் இன்று ஆஜர்: கோவை ஏடிஎம் கொள்ளை கும்பல்: தலைவனை பிடிக்க தனிப்படை



  • உ.பியில் பயங்கரம்: மைனர் பெண் தீ வைத்து எரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]