இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டெல்லியில் ஜூலை முதல் மீண்டும் போராட்டம் : 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் முடிவு

6/17/2017 6:01:30 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

திருச்சி: அகில இந்திய விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. தென்மாநில அமைப்பாளர் அய்யாக் கண்ணு, வட மாநில அமைப்பாளர் வி.எம்.சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழகத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பழனிவேல், துணை தலைவர்கள் கிருஷ்ணன், செந்தில்குமார், மாநில செயலாளர் தினேஷ் மற்றும் 29 மாநிலங்களில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேளாண் விலை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும். தனிநபர் காப்பீடு திட்டம் நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அய்யாக்கண்ணு கூறியதாவது: டெல்லியில் ஏற்கனவே 41நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து 10 பேர் கொண்ட செயற் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு போராட்டம் தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தும். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தின் போது விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதை நினைவு கூரும் வகையில் அச்சம்பவம் நடந்த மந்த் சவுரில் இருந்து ஜூலை 6ம் தேதி விவசாயிகள் குழு தனது பயணத்தை தொடங்குகிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன் வைத்து இந்த பயணம் தொடங் குகிறது. இதே போல டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்திய போராட்டத்துக்கு நியாயம் கிடைக்காததை தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் இதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

மேலும் சில
  • இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை



  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு



  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்



  • புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்



  • கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் கருகி பலி



  • வரும் நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: செங்கோட்டையன் தகவல்



  • தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?: ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு



  • டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி



  • சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது குறைந்த விலையில் தின்பண்டம்: அரசிடம் வலியுறுத்த விஷால் முடிவு



  • ஊதிய உயர்வு கோரி காட்டாங்கொளத்தூரில் 3வது நாள் போராட்டம் தனியார் மருத்துவமனை நர்ஸ்கள் கைகளை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரி தாக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]