இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் சவால் நிறைந்ததாக இருக்கும்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி

6/16/2017 5:15:17 PM
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம் புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்

லண்டன்: மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரு சாதாரண போட்டியில் விளையாடினாலே எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறி கிடக்கும். இவ்விரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபியின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் நாளை மறு நாள் (18ம் தேதி) மோதவுள்ளதால் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்களை பொறுத்த வரை இது வெறும் கிரிக்கெட் போட்டியாக இருக்க போவதில்லை. அவர்களை பொறுத்தவரை இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்தான். பர்மிங்ஹாமில் இருந்து இறுதி போட்டி நடைபெறும் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்திற்கு இந்திய படை இன்று பயணிக்கிறது.  2000, 2002, 2013 வரிசையில் 4வது முறையாக இந்தியா இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 4 முறை இறுதி போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி இந்தியா மட்டுமே. இதில், 2002 (மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இலங்கையுடன் இணைந்து இணை சாம்பியன்), 2013 தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியோ முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 ஐசிசி தொடர் ஒன்றின் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் யுத்தம் புரியவிருப்பது இது 2வது முறை. முன்னதாக 2007 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகுடம் சூடியது. சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் டிராபியில் 2-1 என்ற பாகிஸ்தானின் முன்னிலையை நடப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 2-2 என சமனுக்கு கொண்டு வந்தது. வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில் வெற்றி பெற்ற பின், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டி குறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் கோஹ்லி சுருக்கமாகவே பதிலளித்தார். ‘பாகிஸ்தான் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் நடப்பு தொடரில் பாகிஸ்தானின் சிறப்பான செயல்பாடுகள் என்னை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். இறுதி போட்டியில் நிச்சயம் அவர்கள் கடுமையான போட்டியை வழங்குவார்கள். எனவே இறுதி போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இதற்காக அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. இதுவரை விளையாடிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானதுதான்’ என்றார்.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]