இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சர்ச்சைக்குரிய பேச்சு : ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்

6/15/2017 3:48:49 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

ரோத்தக்: யோகா குரு பாபா ராம்தேவ், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரியானா மாநிலம், ரோத்தக் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவேன் என பேசினார். சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும், அரியானா மாநில முன்னாள் அமைச்சருமான சுபாஷ் பத்ரா, ராம்தேவ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அரியானா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மே மாதம் 12ம் தேதி நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் ஆஜராக வேண்டும் என கூறியதுடன், ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

ஆனால், பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் அப்போது ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜூன் 14ம் தேதியன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்றும் அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஹரிஷ் கோயல், பாபா ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கை ஆகஸ்டு மாதம் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும் சில
  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



  • சீனாவுக்கான இந்திய தூதராக கவுதம் பம்பாவாலே நியமனம்



  • ராணுவ வீரர்களுடன் தீபாவளி நிர்மலா சீதாராமன் முடிவு



  • சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வாட்டி வதைக்கின்றனர்: ரிசர்வ் படை வீரர் வீடியோவால் சர்ச்சை



  • தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபத்ரசிங் உறவினர்கள் பாஜவுக்கு தாவல்: காங். அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]