இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அசாம், மணிப்பூரில் கனமழை: 13 பேர் பலி

6/15/2017 3:47:56 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

கவுகாத்தி: அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பெய்துவரும் கனமழைக்கு 13 பேர் பலியாகினர். வெள்ளம் சூழ்ந்த மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அசாம், மணிப்பூர், மிசோரமில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் அதிகபட்சமாக 105.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. லக்‌ஷிபூர், சோனித்பூர், தரான்ஜ், டெமாஜி, கரிம் கஞ்ச் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கனமழையால் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சாலைகள் அதிகளவில் சேதமடைந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தவிக்கும் மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அசாம் மட்டுமின்றி மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

மேலும் சில
  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



  • சீனாவுக்கான இந்திய தூதராக கவுதம் பம்பாவாலே நியமனம்



  • ராணுவ வீரர்களுடன் தீபாவளி நிர்மலா சீதாராமன் முடிவு



  • சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வாட்டி வதைக்கின்றனர்: ரிசர்வ் படை வீரர் வீடியோவால் சர்ச்சை



  • தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபத்ரசிங் உறவினர்கள் பாஜவுக்கு தாவல்: காங். அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]