டிஜெஎஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
6/13/2017 5:06:29 PM
கும்மிடிப்பூண்டி: டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நேற்று நடந்தது. இதற்கு டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், தாளாளர் பழனி, டிஜெஎஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் பழனி, நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் விஜயராகவன், கோபாலகிருஷ்ணன், நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்து பேசினர்.
இதில் டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசும்போது, “தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வி மாற்றம் மாணவர்களை எவ்வித போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ள செய்யும். மாணவர்கள் பொறுப்புணர்வோடு கல்வி கற்க வேண்டும்” என்றார். விழாவில். 10ம் வகுப்பில் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 4 மாணவர்களுக்கு 2 வருடத்திற்கான கல்வி கட்டணமாக தலா 72 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையும், 480 மதிப்பெண்களை பெற்ற 6 மாணவர்களுக்கு தலா 36 ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. 9 மற்றும் 10ம் வகுப்பு ஏழை மாணவர்களுக்கு இலவச கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது.