இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்: ஜெட்லி தலைமையில் டெல்லியில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

6/10/2025 6:00:55 PM
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார் : புதிய இந்தியாவை உருவாக்க மக்களுக்கு அழைப்பு 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2065 ஏரிகளை சீரமைக்க திட்டம் கோட்டையில் கொடியேற்றி முதல்வர் பேச்சு

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜிஎஸ்டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிமுறையை அமல்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.  ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என 4 அடுக்குகளை கொண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 15வது கூட்டத்தில், அனைத்து பொருட்களுக்குமான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விகிதம் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கூறும்போது, மொத்தம் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட பொருட்களில் 7 சதவீத பொருட்கள் வரி விலக்கு பெற்றுள்ளன. 14 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பின்கீழும், 17 சதவீத பொருட்கள் 12 சதவீத வரிவிதிப்பின்கீழும், 43 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்பின்கீழும், 19 சதவீத பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பின் கீழும் வரும் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில் மேலும் சில பொருட்களுக்கு இன்னும் வரி நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் தொலைத் தொடர்பு துறை, நிலக்கரி துறை, தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை ஆகிய துறைகளுக்கு விதிக்கப்பட்ட வரி சதவீதம் அதிகம் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன. இந்த சூழலில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதால், இது குறித்த முழுமையான முடிவுகள் எட்டப்பட வேண்டியுள்ளது. இதனால் ஜிஎஸ்டி கவுன்சிலின் 16வது கூட்டம் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நாளை கூடுகிறது. இதில் வரி நிர்ணயம் செய்யப்படாத பல்வேறு துறைகளுக்கான வரி விகிதம் முடிவு செய்யப்படும். மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாக கூடும் கடைசி கவுன்சில் கூட்டமாக இது இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி குறித்த இறுதி முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிகிறது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்த உள்ளதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சில
  • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார் : புதிய இந்தியாவை உருவாக்க மக்களுக்கு அழைப்பு



  • அசாமில் கனமழை: 15 லட்சம் பேர் பாதிப்பு: ஒரே நாளில் 10 பேர் பலி



  • ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை: மத்திய அரசு முடிவு



  • வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்



  • இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு பலி 48 ஆனது: மலைப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை



  • இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால் அன்சாரி வேறு நாட்டுக்கு செல்லலாம்



  • பள்ளிகளில் சுதந்திர தின விழா: மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற முடியாது: மம்தா உத்தரவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்



  • பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் நாட்டிலேயே மிக உயரமான 360 மீ கம்பத்தில் தேசியக் கொடி



  • மானசரோவர் யாத்திரை நிறுத்தி வைப்பு



  • தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது ஐக்கிய ஜனதாதளம்: முதல்வர் நிதிஷ்குமார் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]