இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்: 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து

6/7/2025 4:02:31 PM
காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்கியது. இது, 3 நாட்கள் நடைபெற உள்ளதால் ஆர்ஜித சேவைகள் ரத்து  செய்யப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை திரியோதசியன்று ஜேஷ்டாபிஷேகம் தொடங்கப்பட்டு, பவுர்ணமியன்று  நிறைவு பெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஜேஷ்டாபிஷேகம் இன்று முதல் 9ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கிறது.ஜேஷ்டம் என்றால் முதன்மை என்பது அர்த்தம். அனைத்து அபிஷேகங்களுக்கும் முதன்மையாக விளங்குவது என்பதால் ஜேஷ்டாபிஷேகம் என்று  அழைக்கப்படுகிறது. ஜேஷ்டாபிஷேகம் செய்வதன் நோக்கம், பழமையான உற்சவமூர்த்திகளான மலையப்ப சுவாமி, தேவி பூதேவி சிலைகளுக்கு  எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக செய்யப்படுகிறது.

இதையொட்டி இன்று உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் அகற்றப்பட்டு, கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் பால், தேன், தயிர்,  இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் புனுகு தைலம், பச்சை கற்பூரம் உட்பட பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய  கலவை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் வைர கற்கள் பொருந்திய கவசம் அணிவிக்கப்பட்டு, உற்சவ  மூர்த்திகள் நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

2வது நாளான நாளை முத்து கவசம் அணிந்தும், 3ம் நாள் தங்க கவசம் அணிந்தும் நான்கு மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர். நிறைவு  நாளில் உற்சவமூர்த்திக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் அடுத்த ஆண்டு நடக்கும் ஜேஷ்டாபிஷேகத்தின்போது தான் அகற்றப்படும்.இதையொட்டி கோயிலில் தினந்தோறும் நடக்கும் கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உட்பட  ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்



  • மருத்துவ கல்விக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது : ஜூலை 14ல் தகுதி பட்டியல் வெளியீடு



  • கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி புதுவையில் இன்று முழுஅடைப்பு



  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய ‘பி’ அறையை திறக்கவிட மாட்டோம் : மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய வர்மா ஆவேசம்



  • வருகிற 23ம் தேதி பிரணாப்புக்கு எம்பிக்கள் பிரிவு உபசார விருந்து



  • தீவிரவாதி பர்கான் வானி ஓராண்டு நினைவு தினம் முழு அடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு: காஷ்மீர் முழுவதும் போலீசார் உஷார்



  • குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்



  • அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்



  • ரயில்வே ஓட்டல் டெண்டர் முறைகேடு லாலு குடும்பம் மீது சிபிஐ திடீர் வழக்கு: டெல்லி, பாட்னா உள்பட 12 இடங்களில் ரெய்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]