இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

எதிர்ப்பின்றி வீழ்ந்தது நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி ஆனாலும் முழு திருப்தி ஏற்படவில்லை: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து

6/7/2025 3:51:43 PM
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம் புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்

கார்டிப்: கார்டிப் சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6வது லீக் போட்டியில், இங்கிலாந்து-நியூசிலாந்து  அணிகள் (குரூப் ஏ) மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 64, ஜோஸ் பட்லர் 61  ரன்கள் எடுத்தனர். ஆடம் மிலன், கோரி ஆண்டர்சன் தலா 3, சவுத்தி 2, போல்ட், சான்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த  நியூசிலாந்து 44.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் ேதால்வியடைந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 87  ரன்கள் எடுத்தார். பிளங்கெட் 4, ஜேக் பால், அடில் ரஷீத் தலா 2, மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 8 ஓவர்களில் 31 ரன்கள்  மட்டும் கொடுத்து (2 மெய்டன்) 2 விக்கெட் வீழ்த்திய ஜேக் பால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

 முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து 2வது வெற்றியின் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அடுத்ததாக  வரும் 10ம் தேதி நடைபெறும் 3வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்  2வது அணியாக ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில்  நியூசிலாந்து நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 9ம் தேதி நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும், இங்கிலாந்திடம்  ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் மட்டுமே நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும். வங்கதேசத்திற்கும் இன்னும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.  நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்று, இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால், வங்கதேசத்திற்கு அரையிறுதி  வாய்ப்பு கிடைக்கும்.

 நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது.  ஆனால் எனக்கு முழு திருப்தியில்லை. எங்களது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் எங்களின்  பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனினும் 30 ரன்கள் குறைவாக எடுத்ததாகவே கருதுகிறேன். ஒரு கட்டத்தில் நாங்கள் 340 ரன்களை கடப்பதற்கான  வாய்ப்பு இருந்தது. அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம். வலுவான  அணிகளை நாங்கள் வீழ்த்த வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியா வலுவான அணி. எதற்காகவும், எந்த அணிக்கும் வெற்றியை விட்டு கொடுக்க  மாட்டோம்’ என்றார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘அனைத்து துறைகளிலும் எங்களை விட இங்கிலாந்து சிறப்பாக  செயல்பட்டது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]