வாலிபர் அடித்து கொலை
6/7/2025 3:22:26 PM
திருமலை: ஆந்திர மாநிலம் திப்பபாலத்தை சேர்ந்தவர் ராமஆஞ்சநேயலு(23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் தந்தை விஜயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராம ஆஞ்சநேயலு துபாய்க்கு வேலைக்கு சென்றுவிட்டு 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். அவர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கிடையில் கடந்த மாதம் 2ம்தேதி முதல் ராம ஆஞ்சநேயலு காணவில்லை. விஜயகுமார் மீது சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். ராம ஆஞ்சநேயலு, தனது மகளை திருமணம் செய்து கொள்வதில் விஜயகுமாருக்கு விருப்பமில்லை. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கடந்த மாதம் 2ம்தேதி விஜயகுமார் தனது உறவினரான நாகபாபுவை சந்தித்து, திருமணம் குறித்து பேச வருமாறு கூறி ராமஆஞ்சநேயலுவை வரழைக்கும்படி கூறியுள்ளார்.அதன்படி கொல்லபாளையம் பகுதிக்கு வந்த ராமஆஞ்சநேயலுவை, விஜயகுமார் இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்து கொலை செய்து, சடலத்தை கடற்கரை அருகே புதைத்து விட்டு சென்று உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.