இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ராணுவத்தினர் அதிரடி: நாகாலாந்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

6/7/2025 3:12:02 PM
காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

கோஹிமா: நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருதரப்பினர் இடையே நடந்த சண்டையில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், அரசுக்கு எதிராக பிரிவினை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக அரசுடன் மோதல்போக்கை கடை பிடிக்கும் இக்குழுக்கள், அவ்வப்பொழுது நாசவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நாகாலாந்தின் மோன் பகுதியில், தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷியலிஸ்ட் கவுன்சிலை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வீரர்கள் நேற்று இரவு தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். இருதரப்பினர் இடையே கடும் சண்டை நடந்தது. இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.   தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் சில
  • ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்



  • மருத்துவ கல்விக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது : ஜூலை 14ல் தகுதி பட்டியல் வெளியீடு



  • கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி புதுவையில் இன்று முழுஅடைப்பு



  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய ‘பி’ அறையை திறக்கவிட மாட்டோம் : மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய வர்மா ஆவேசம்



  • வருகிற 23ம் தேதி பிரணாப்புக்கு எம்பிக்கள் பிரிவு உபசார விருந்து



  • தீவிரவாதி பர்கான் வானி ஓராண்டு நினைவு தினம் முழு அடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு: காஷ்மீர் முழுவதும் போலீசார் உஷார்



  • குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்



  • அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்



  • ரயில்வே ஓட்டல் டெண்டர் முறைகேடு லாலு குடும்பம் மீது சிபிஐ திடீர் வழக்கு: டெல்லி, பாட்னா உள்பட 12 இடங்களில் ரெய்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]