இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு

6/6/2025 4:02:27 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி சிந்து (32), டாக்டர். இவர்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றினர். 2011ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, நாமக்கல் முல்லைநகர் ஹவுசிங்போர்டில் உள்ள தனது வீட்டில் டாக்டர் சிந்து, தாய் சத்தியவதி (50), பாட்டி விசாலாட்சி (68) ஆகியோருடன் தனியாக இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்து, டாக்டர் சிந்து உள்ளிட்ட 3 பேரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, வீட்டிலிருந்த 28 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து சென்னை சந்தானம் (28), வாணியம்பாடி காமராஜ் (33), பரமத்திவேலூர் இளங்கோ(27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே கரூர் மாவட்டத்தில், மேலும் 3 பெண்களை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் சந்தானம் உள்ளிட்ட 3 பேரும் கைதாகினர். இதை விசாரித்த கரூர் மாவட்ட நீதிமன்றம், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சந்தானம், கடந்த 2014ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறையில் இறந்து விட்டார். இதையடுத்து காமராஜ், இளங்கோ இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், அளித்த தீர்ப்பில் காமராஜ், இளங்கோ ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் சில
  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



  • பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது



  • 10 பேரை ஏமாற்றி திருமணம் மணக்கோலத்தில் சிக்கிய ‘கல்யாண ராணி’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]