10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் ஏபிஎஸ் வித்யாமந்திர் பள்ளி சாதனை
6/6/2025 3:57:40 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் ஏ.பி.எஸ் வித்யாமந்திர் பள்ளியில் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் 37 மாணவர்கள் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அனைத்து பாடங்களிலும் 3 மாணவர்கள் முழுமையான 10 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 25 மாணவர்கள் 9 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர். பாடவாரியாக ஆங்கிலத்தில் 19 மாணவர்கள், தமிழில் 27 மாணவர்கள், கணிதத்தில் 7 மாணவர்கள், அறிவியலில் 11 மாணவர்கள், சமூக அறிவியலில் 11 மாணவர்கள் 10 புள்ளிகளை முழுமையாக பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி செயலாளர் ரமேஷ் சுப்பிரமணியம், பொருளாளர் பிரேமா சுப்பிரமணியம், முதல்வர் ரதிமேனன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.