இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி

6/6/2025 3:51:53 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

திருச்சி: கடந்த நவம்பர் 8ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிவித்தது முதல் 2 நாட்களுக்கு அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டன. தங்களிடமிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் வங்கிகளில் குவிந்தனர். அதேசமயம் புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவினாலும், சில்லரை தட்டுப்பாடு அதிகரித்தது. பின்னர் ஏடிஎம்கள் படிப்படியாக செயல்பட துவங்கின. ஆனால் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏடிஎம்களிலும் மக்கள் கியூவில் காத்து நின்றனர். கிட்டத்தட்ட 2 மாதம் இதே நிலை நீடித்ததால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். படிப்படியாக பணத்தட்டுப்பாடு குறைந்து, ஏடிஎம்கள் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

திருச்சி: திருச்சியில் மத்திய பஸ் நிலையம், கண்டோன்மென்ட், சத்திரம் பஸ் நிலையம், உறையூர் மற்றும் ரங்கம் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள அரசுடைமை வங்கி ஏடிஎம்களில் கடந்த 2 நாட்களாக தேவைக்கேற்ப பணம் வைக்கப்படாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

கரூர், தஞ்சை: கரூர் நகரம், தாந்தோணிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களிலும் மக்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையே நீடிக்கிறது. தஞ்சையில் முக்கிய இடங்களாக கருதப்படும் ஆர்எம்எச் ரோடு, தெற்கு வீதியில் உள்ள ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழ்நிலையே எப்போது நீடிக்கும், கடந்த 2 நாட்களாக அனைத்து ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நீடித்தது. புதுகை, நாகை, திருவாரூர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவியது. இதே நிலையே நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் நீடிக்கிறது. ஏடிஎம் பணத்தட்டுப்பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் சில
  • ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம்



  • நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் : புதுவை காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 5க்கு ஐகோர்ட் தள்ளிவைப்பு



  • ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம்



  • 30 பேர் பலியான வழக்கு ரூ.1.78 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு : 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு



  • 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது



  • சைதை தொகுதி திமுக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு திட்டம் : மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்



  • சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் அரைகுறை பாலங்களால் போக்குவரத்து திணறல்



  • இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் டிஜிபி ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு : தமிழக அரசு உத்தரவு



  • நெடுவாசலில் கிராம மக்கள் 79வது நாளாக போராட்டம்



  • தமிழகம் முழுவதும் 3வது நாளாக விசைத்தறிகள் ஸ்டிரைக்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]